பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
146

New Page 1

கொண்டு பரமபதத்தளவும் செல்லப் பாராநிற்பாள். வியர்க்கும் - அங்குக் காணாமையாலே, ‘என்னளவு இதுவாய் இருக்க வாராது ஒழிவதே!’ என்று நொந்து, இளைப்பாலே வேராநிற்பாள். மழைக்கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும் - மழைபோலே அருவி சொரிகின்ற கண்ண நீரானது கோபத்தீயாலே சுவறி அடி அற்றுக் கண்ணளவிலே துளும்பும்படி அவ்வெம்மை தோன்ற நெடுமூச்சு எறிவாள். என்றது, ‘வியர்வையாய்ப் புறப்பட்டுப் புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படும்; கண்ணீராய்ப் புறப்படாதது நெடுமூச்சாய்ப் புறப்படும்,’ என்றபடி.

    மெய் சோரும் - அகவாயில் உள்ளது நேராகப் போனவாறே தன் வசம் இல்லாத சரீரத்தையுடையவள் ஆம். 1‘இவள்படியே இப்படித் துவளுவது! ஏன்? முடிந்தாலோ?’ எனின், அற முடிய ஒட்டாதே ஆசையாகிய தளை? பெயர்த்தும் கண்ணா என்று பேசும் - மீண்டும் ‘கிருஷ்ணனே!’ என்று விளிப்பாள். பெருமானே வா என்று கூவும் - 2அவ்வாறு விளித்து, அந்தத் திருப்பெயராலே பிறந்த நினைவின் மிகுதியாலே வந்த உருவெளிப்பாட்டாலே வந்தானாகக் கொண்டு, ‘வா’ என்று அழைப்பாள். அன்றிக்கே, பின்னையும் ‘உடையவன் உடைமையை இழக்க விடுமோ?’ நாம் படுவது காண மறைய நின்றானத்தனை’ என்று ‘வா என்று அழைப்பாள்’ என்னுதல். மயல் பெருங்காதல் என் பேதைக்கு - மயக்கத்தைச் செய்யக் கூடியதான பெரிய காதலையுடைய என்னுடைய இளம் பெண்ணுக்கு, என் செய்கேன் - இவள் மயங்காதபடி செய்யவோ? நான் இதனைப் பொறுத்திருக்கவோ? வல்வினையேனே - இவளை இப்படிக்

_____________________________________________________

1. தாயாரின் ஈடுபாடு, ‘இவள் படியே’ என்று தொடங்கும் வாக்கியம். ‘இவள்
  படி’ என்றது, சிலேடை :  சரீரமும், விதமும்.

2. ‘பெருமானே வா என்று கூவும்’ என்றதற்கு இரண்டு விதமாகக் கருத்து
  அருளிச்செய்கிறார், ‘அவ்வாறு விளித்து’ என்று தொடங்கி. ‘உரு வெளிப்பாடு’
  என்றது, ஞானத்தின் தெளிவை. முதல் கருத்து, பாவனையின் மிகுதியாலே
  முன்னே தோன்றுகையாலே வா என்று அழைக்கிறாள் என்பது. இரண்டாவது
  கருத்து, ‘இந்நிலையில் உடையவன் நம்மை விட்டுப் போகான், மறைய
  நிற்கின்றான்’ என்று நினைத்து வா என்று அழைக்கிறாள் என்பது.