பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
159

மாலைகள்’ என்றபடி. ஏற்ற - 1‘ஆராதனத்தைத் தாமாகவே தலையாலே ஏற்றுக்கொள்ளுகிறார்’ என்கிறபடியே, திருக்குழலிலே ஏற்றும்படியாக. நோற்றேற்கு - இவர் இப்போது நோற்றாராகச் சொல்லுகிறது, ‘மண்ணையிருந்து துழாவி’ என்னும் திருவாய்மொழியில் சொல்லப்பட்ட விடாயை; 2முன் கணத்திலே நிகழ்வது ஒன்றேயன்றோ ஒன்றுக்கு ஏதுவாவது?

    அன்றிக்கே, 3‘பகவானுடைய கிருபையை’ என்னலுமாம். இனி என்ன குறை - 4பரமபதத்திற்குச் சென்றாலும் தொண்டு செய்தலாலேயாகில் சொரூபம்; அதனை இங்கே பெற்ற தனக்கு ஒரு குறை உண்டோ? 5இங்கே இருந்தே அங்குத்தை அனுபவத்தை அனுபவிக்கப்பெற்ற எனக்கு ‘அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறை உண்டோ? 6அங்கே போனாலும் சூழ்ந்திருந்து ஏத்துவர்

_____________________________________________________

1. ஸ்ரீ சாத்வதம். ‘திருக்குழலிலே ஏற்றும்படியாக’ என்றது, ‘சிரசாகத் தரிக்க’
  என்றபடி.

2. ‘‘மண்ணையிருந்து துழாவி’ என்ற திருவாய்மொழியிலுண்டான விடாயைச்
  சாதனமாகச் சொல்லலாமோ?’ என்ன, அந்த வருத்தத்தைக் கண்டு
  அனுபவிப்பிக்கையாலே முன் கணத்தில் இருந்தமை மாத்திரமே கொண்டு
  அருளிச்செய்கிறதொழிய, உபாயம் அன்று என்று திருவுள்ளம் பற்றி
  அருளிச்செய்கிறார் ‘முன்கணத்திலே’ என்று தொடங்கி. ‘ஈசுவரன்
  அபிப்பிராயத்தாலே ஏது’ என்றபடி.

3. ‘பகவானுடைய கிருபையை என்னலுமாம்’ என்றது, ‘நன்று சூட்டும் விதி
  எய்தினம்’ என்கிறபடியே, ‘பகவானுடைய கிருபையை’ என்றபடி.

4. ‘‘இனி என்ன குறை’ என்னலாமோ? பரமபதப் பிராப்தி முதலானவை
  வேண்டாவோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பரமபதத்திற்குச்
  சென்றாலும், என்று தொடங்கி.

5. ‘இனி என்ன குறை’ என்றதனைச் ‘சொன்மாலைகள் ஏற்ற நோற்றேற்கு’
  என்றதனோடே கூட்டி, பாவம் அருளிச்செய்தார் மேல்; ‘இனி என்ன குறை’
  என்றதனைப் ‘போற்றி’ என்ற பதத்தோடு கூட்டி வேறும் ஒரு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘இங்கேயிருந்தே’ என்று தொடங்கி. 

6. ‘அங்குத்தை அனுபவம் யாது?’ என்ன, ‘அங்கே போனாலும்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்,

  ‘பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியைச் சார்ங்கமென்னும்
  வில்லாண் டான்தன்னை வில்லிபுத் தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
  நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயஎன்று
  பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே.’

  என்பது திருப்பல்லாண்டு, பா. 12.

  ‘பூவள ரும்திரு மாது புணர்ந்தநம் புண்ணியனார்
  தாவள மான தனித்திவம் சேர்ந்து, தமருடனே
  நாவள ரும்பெரு நான்மறை ஓதிய கீதமெலாம்
  பாவள ரும்தமிழ்ப் பல்லாண் டிசையுடன் பாடுவமே.’

  என்பது வேதாந்த தேசிகன் ஸ்ரீசூக்தி.