பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
168

வல

வல்லியில் பிரசித்தி. அச்சுதன் - 1இதனை ஒரு பிரமாணம் கொண்டு விரித்துக்கூற வேண்டுமோ? இவ்வானந்தத்திற்கு ஒருகாலும் அழிவு இல்லை என்னுமிடம் 2திருப்பெயரே சொல்லுகிறதே அன்றோ? வீவு இல் சீரன் - இந்த ஆனந்தத்திற்கு அடியான 3பரமபதத்தை உடையவன். அன்றிக்கே, ‘நித்தியமான குணங்களையுடையவன்’ என்றுமாம். 4குணங்களும் விபூதியும் ஆனந்தத்திற்குக் காரணமாய் அன்றோ இருப்பன? மலர்க்கண்ணன் - 5ஆனந்தத்தை இயல்பாகவேயுடையவன் என்னுமிடத்தைத் திருக்கண்கள்தாமே கோள் சொல்லிக்கொடுப்பனவாம். விண்ணோர் பெருமான் தன்னை - 6இக்கண்ணழகுக்குத் தோற்று ‘ஜிதம் - தோற்றோம்’ என்பாரை ஒரு நாடாகவுடையவனை. 7‘தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவுந் தலைமகனை’ என்னக்கடவதன்றோ?

    வீவு இல் காலம் - ‘சிற்றின்பங்களை அனுபவிக்கப் புக்கால், அவை அற்பம் நிலை நில்லாமை முதலிய குற்றங்களாலே கெடுக்கப்பட்டவை ஆகையாலே, அனுபவிக்குங்காலமும் அற்பமாய் இருக்கும்; இங்கு, அனுபவிக்கப்படும் பொருள் அளவிற்கு அப்பாற்பட்டதாகையாலே, காலமும் முடிவில்லாத காலமாகப் பெற்றது,’ என்பார், ‘வீவில்

_____________________________________________________

1. ‘இதனை’ என்றது, ‘நித்தியமான நிரதிசயமான ஆனந்தத்தையுடையவனாய்
  இருக்கிற இதனை’ என்றபடி.

2. ‘திருப்பெயரே சொல்லுகிறதேயன்றோ?’ என்றது, அச்சுதன் என்ற
  திருப்பெயரின் பொருளினைத் திருவுள்ளம் பற்றி. அச்சுதன் - அழியாதவன்.
  ‘சுதந்திரமின்றித் தோன்றியழியும் உயிரும் பிறவுமாகிய சகத்திற்கு அவ்வாறு
  தோன்றியழியான் தலைவனாக வேண்டும்,’ என்பார், ‘அச்சுதன்’ என்றார்.

  (நன். சூ. 258. சங்.)

3. சீரன் - உலகத் (பரமபதத்) தையுடையவன். ‘சீர்’ என்றது, ‘ஸ்ரீ’
  என்றபடியால் உலகத்தைச் சொல்லுகிறது. இரண்டாவது பொருளில் ‘சீரன் -
  குணங்களையுடையவன்.’ சீர் - குணம்.

4. ஆனந்தத்தைக் கூறிய பின், குணங்களையும் விபூதியையும்
  அருளிச்செய்கைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘குணங்களும்
  விபூதியும்’ என்று தொடங்கி.

5. முதலடியினையும் கூட்டிக் கருத்து அருளிச்செய்கிறார், ‘ஆனந்தத்தை
  இயல்பாகவேயுடையவன்’ என்று தொடங்கி.

6. ‘மலர்க்கண்ணன்’ என்றதன் பின் ‘விண்ணோர் பெருமான்’ என்றதனை
  வைத்ததற்கு வாசனை ‘இக்கண்ணழகுக்குத் தோற்று’ என்று தொடங்குவது.

7. திருவாய்மொழி, 2. 6 : 2.