பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
175

New Page 1

போகட்டுப் பலத்தில் விருப்பமில்லாமல் செய்வாய்’ என்று, பின்னர் ஆத்தும ஞானத்தைப் பிறப்பித்து, பின்பு பகவத் ஞானத்தைப் பிறப்பித்து, எப்பொழுதும் நீங்காத நினைவின் உருவமான உபாசனக் கிரமத்தை அறிவித்து, இவ்வளவும் கொண்டு போந்து இதன் அருமையை அவன் நெஞ்சிலே படுத்தி, ‘இவை என்னால் செய்யத் தக்கவை அல்ல’ என்று கூறிச் சோகித்த பின்பு, ‘ஆகில், என்னைப் பற்றிப் பாரம் அற்றவனாய் இரு,’ என்று தலைக்கட்டினாற்போலே ஆயிற்று, கிரமத்தாலே தன்னுடைய குணங்களையும் செயல்களையும் இவரை அனுபவிப்பித்தபடி.

    எம்மான் தன்னை - 1‘அருச்சுனனுக்குப் பலித்ததோ, இல்லையோ, அறியேன். அந்த உபதேசத்தின் பலம் நான் பெற்றேன்,’ என்கிறார். அவனும் இப்பொருளைக் கேட்ட பின்னர், 2‘அடியார்களை நழுவ விடாதவரே! தேவரீர் திருவருளால் என்னால் தத்துவஞானம் அடையப்பட்டது; விபரீத ஞானம் நீங்கியது; எல்லாச் சந்தேகங்களும் நீங்கி நிலைபெற்றவனாய் இருக்கிறேன்; போர் செய்ய வேண்டும் என்கிற தேவரீருடைய வார்த்தையை இப்போதே நிறைவேற்றிவிடுகிறேன்,’ என்று கூறியவன், மீண்டும், 3‘சந்தேகத்தையுடையவனாய் இருக்கிறேன்’ என்றானே அன்றோ? 4உத்தேசிக்கிறவனும் எல்லார்க்கும் பொதுவானவன்; உபதேசிக்கிற பொருளும் எல்லார்க்கும் பொதுவானது. ஆகையாலே, அதனையறிந்த இவர்க்குப் பலித்தது என்னத்

_____________________________________________________

1. ‘எல்லாப் பொருளும் விரித்தானை, எம்மான்தன்னை’ என்று கூட்டி வேறும்
  ஒரு கருத்து அருளிச்செய்கிறார், ‘அருச்சுனனுக்கு’ என்று தொடங்கி.

2. ஸ்ரீகீதை, 18 : 73.

3. ‘சந்தேகத்தையுடையவனாய் இருக்கிறேன்’ என்பது, ஸ்ரீகீதையில்
  இல்லையேயாகிலும், கீதை உபதேசம் பெற்ற பின்னர், அந்த அர்த்த
  விஷயமாக மீண்டும் கேள்வி கேட்ட அருச்சுனனை நோக்கிக் கிருஷ்ணன்,
  ‘நிச்சயம் நீ சந்தேகத்தை உடையவனாய் இருக்கிறாய்,’ என்ற அநுகீதையில்
  கூறினானாதலின், அதனை அநுவாதம் பண்ணி அருளிச்செய்கிறார்,
  ‘சந்தேகத்தையுடையவனாக இருக்கிறேன் என்றானேயன்றோ?’ என்று.

4. ‘அருச்சுனனுக்கு உபதேசித்திருக்க, ‘இவர் நான் பெற்றேன்’ என்கிறது
  எப்படி?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘உபதேசிக்கிறவனும்’
  என்று தொடங்கி. ‘இப்படி உபதேசம் பலித்த விடம் உண்டோ?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘விட்டு சித்தர்’ என்று தொடங்கி.

  ‘செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த
  மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்.’

  என்பது நாய்ச்சியார் திருமொழி, 11 : 10.