|
New Page 1
‘பெரிய கோலத் தடங்கண்ணனாகிய
பெருமான்’ என்றும் தனித்தனியே கூட்டிக்கோடல் வேண்டும். வெளிய நீறு - பச்சைக்கற்பூரச் சூர்ணம்.
‘நீறு’ என்பது, பல பொருள் ஒரு சொல் : ‘சிலைவேடன் அவ்வளவில், நீறாய் விழுந்தான் நிலத்து’
(நளவெண்) என்றவிடத்துச் சாம்பலையும். ‘மாந்தரும் மாவும் செல்ல மயங்கிமேல் எழுந்த
நீறு’ (சிந்.) என்றவிடத்துப் புழுதியையும். ‘மந்திரமாவது நீறு’ என்றவிடத்து விபூதியையும்
காட்டுதல் காண்க. அரசர்கள் அஞ்சனம் அணிந்துகோடல் மரபு. ‘உள்ளப்பெற்றேற்கு எனக்கு இன்று
தொட்டும் இனி என்றும் அரியது உண்டோ?’ எனக் கூட்டுக.
ஈடு : ஆறாம்
பாட்டு. 1‘சர்வேசுவரன் திருவடிகளில் அடிமை செய்யவும் பெற்றுத் தடைகளும் போகப்பெற்றேன்,’
என்றார் மேல் பாசுரத்தில். ‘ஆனால், இனி உமக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்றான் ஈசுவரன்;
‘இதற்கு முன்பு பெறாததாய் இனிப் பெற வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.
கரிய மேனி மிசை
- 2திருக்கண்களில் கருவிழியினுடைய கறுத்த நிறத்தால் வந்த அழகுக்கு மேலே. மேனி
- நிறம். ‘கரியவாகிப் புடை பரந்து’ என்னக்கடவதன்றோ? வெளிய நீறு - அஞ்சன சூர்ணம், சிறிதே
இடும் -அதனை அளவே கொண்டு அலங்கரிக்கும். 3‘ஆரார் அயில் வேற்கண் அஞ்சனத்தின்
நீறு அணிந்து’ என்னக் கடவதன்றோ? அழகுக்கு இட வேண்டுவது இல்லையே? இனி, மங்களத்தின்பொருட்டு
இடுவது ஆகையாலே, ‘சிறிதே இடும்’ என்கிறது. பெரிய கோலம் - ஒப்பனை வேண்டாதபடி அழகு
அளவு இறந்து இருக்கிறபடி. தடம் கண்ணன் -
_____________________________________________________
1. ‘மாற்றம் மாலை
புனைந்தேத்தி’, ‘வினை நோய்கள் கரிய’ என்பனவற்றைக்
கடாக்ஷித்து, ‘அடிமை செய்யவும் பெற்றுத்
தடைகளும் போகப் பெற்றேன்,’
என்கிறார். இப்பாசுரத்தில் ‘அரிய துண்டோ’ என்றதனைக் கடாக்ஷித்து,
‘ஆனால்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
2. மேலே உள்ள ‘பெரிய
கோலத் தடங்கண்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித்
‘திருக்கண்களில்’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். கரிய மேனி மிசை -
கறுத்த நிறத்தால் வந்த அழகுக்கு மேலே. திருக்கண்கள்
கருமை நிறமாக
இருப்பதற்குப் பிரமாணம் ‘கரியவாகி’ என்பது. இது, அமலனாதிபிரான்,
செய்.
8.
‘கரியவாகிப் புடைபரந்து
மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டஅப்
பெரிய வாய கண்கள் என்னைப்
பேதைமை செய்தனவே.’
என்பது, அப்பாசுரப்பகுதி.
3. சிறிய திருமடல்.
|