பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
19

கூட

கூட்டுக. 1‘உலகில் கழிந்த பிரமர்கள் கங்கையிலே உள்ள மணல் போலவும் இந்திரனாலே பெய்விக்கப்படுகின்ற மழைத்தாரைகள் போலவும் எண்ணுதற்கு முடியாதவர்கள் ஆவர்,’ எனப்படுதலால். ‘கழிந்தவர் நுண்மணலிற்பலர்’ என்கிறார்.

    மனைப்பால்  மருங்கு அற - அசலிட்டுப் பக்கத்தில் உள்ளார்க்கும் நாசமாம்; மனைப்பால் - மனை இடம். மருங்கு - அயல். சிறுக வாழ்ந்தானாகில், தன்னளவிலே போம்; பரக்க வாழ்ந்தானாகில், தன் அயலில் உள்ளாரையும் கொண்டு போம்; பெருமரம் முரிந்தால் அருகு உள்ளவற்றையும் கொண்டு போம் அன்றோ? ஆதலின், ‘மனைப்பால் மருங்கு அற’ என்கிறார். மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம் - 2இப்படி முடியுமது ஒழிய நிலைத்திருப்பாரை ஒருவரையும் கண்டிலோம். ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்னில், பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமின் - ‘பனைபோலே இருக்கையாலே அச்சத்தை உண்டாக்குகின்ற காலையுடைத்தான மதயானை உண்டு, குவலயாபீடம்; அதனை முடித்தவன் திருவடிகளைப் பற்றுதற்குப் பாருங்கோள். 3அவன் உங்களுடைய பிரபலமான தடைகளைப் போக்க, நீங்கள் அவன் காலிலே தலை சாய்க்கப் பாருங்ககோள்,’ என்கிறார். மேற்பாசுரத்தில். 4‘மாம்’ என்ற

_____________________________________________________

1. வைஷ்ணவ தர்ம சாஸ்திரம்.

2. ‘தேங்கொள் பூங்கண்ணித் திருமுடித் திலகவெண் குடையோய்!
   ஈங்கி தன்றியும் இமையவர் அமையலர்க் கடந்த
   தாங்கு மாவண்கைச் சக்கர மிக்குயர் பிறரும்
   யாங்க ணார்? அவ ரூரொடு பேரெமக் குரையாய்.’

  ‘அரசனே! யாம் இவ்வுலகில் மக்கட்குரியனவாகக் கூறிய நிலையாமையே
  அன்றியும், அவரிற்சிறந்த சக்கரவர்த்திகளும் நிலைபெற்றிருந்தாரில்லை.
  அவர்கள் ஊரும் பெயரும் நிலை பெறாமையின், யாம் உணர்ந்திலேம்; நீ
  நிலைபேறு உணர்ந்தன உளவேல், கூறு,’ என்றான் என்க. (சிந். முத்.
  163.
)

3. ‘மதகளிறு அட்டவன்’ என்றதனாற்போந்த பயனை அருளிச் செய்கிறார்,
  ‘அவன் உங்களுடைய’ என்று தொடங்கி. களிறு அட்டது, விரோதிகளைப்
  போக்குதலுக்குச் சூசகம். ‘இரண்டும் இருவர்க்கும் சொரூபம்,’ என்றபடி.

4. ‘மாம்’, ‘அஹம்’ என்ற இரண்டும் சரம சுலோகத்திலுள்ள பதங்கள். மேல்
  பாசுரத்தில், ‘கண்ணன்’ என்றதனால், சௌலப்யம் தோன்றுகிறது. அதனால்,
  ‘மாம்’ என்ற பதத்தின் பொருள் கூறப்பட்டது,’ என்கிறார். இப்பாசுரத்தில்,
  ‘மதகளிறு அட்டவன்’ என்றதனால் ஆற்றல் தோன்றுகிறது. அதனால்,
  ‘அஹம்’ என்ற பதத்தின் பொருள் சொல்லப்படுகிறது என்கிறார்.