பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
192

New Page 1

    பொ-ரை : ‘பிரளய காலத்தில் உலகத்தையெல்லாம் புசித்தும், பிரளயம் நீங்கியவுடனே வெளி நாடு காண உமிழ்ந்தும், திரிவிக்கிரமனாய் அளந்தும், வராக அவதாரமாய் இடந்து எடுத்தும், கடற்கரையிலே கிடந்தும், இலங்கையில் போர் முடிந்த பின்பு தேவர்களுக்குக் காட்சியளித்து நின்றும், மீண்டு வந்து மகுடாபிஷேகம் செய்த திருக்கோலத்தோடு  வீற்றிருந்தும், இராச்சிய பரிபாலனம் செய்தும் போந்த காரியங்களைக் கண்கூடாகப் பார்த்த தன்மையால் இந்த உலகமெல்லாம் தனக்கே உரிமைப்பட்டவை என்று சொல்லும்படி நின்ற சர்வேசுவரனைப் பற்றி வளப்பமான தமிழ்ப்பிரபந்தத்தைச் செய்வதற்குப் புண்ணியத்தைச் செய்தேன்; இப்பிரபந்தமானது அடியார்க்கு இன்பத்தையுண்டாக்கும் மேகமாகும்,’ என்கிறார்.

    வி-கு : ‘மணங்கூடியும் செய்து போந்த காரியங்களைக் கண்ட ஆற்றால்’ என விரித்துக்கொள்க.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1‘அவன் செயல்கள் அடங்க என் சொல்லுக்குள்ளேயாம்படி கவி பாட வல்லேனாய், வகுத்த சர்வேசுவரனிடத்திலே வாசிகமான அடிமை செய்யப்பெற்ற அளவன்றிக்கே, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தையுண்டாக்கக் கூடியவனாகவும் பெற்றேன்,’ என்கிறார்.

    உண்டும் - பிரளய ஆபத்திலே திருவயிற்றிலே வைத்து நோக்கியும். உமிழ்ந்தும் - திருவயிற்றிலேயிருந்து நெருக்குப்படாதபடி வெளி நாடு காணப் புறப்பட விட்டும். கடந்தும் - மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொண்டால் எல்லை நடந்து மீட்டும். இடந்தும் - பிரளயம் கொண்ட பூமியை மஹாவராஹமாய் அண்டப் பித்தியிலே செல்ல முழுகி எடுத்துக்கொண்டு ஏறியும், கிடந்தும் - என்றது, 2‘பகைவர்களை அழிக்கின்ற ஸ்ரீராமபிரான் பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலையணையாகக் கொண்டு, கிழக்கு

_____________________________________________________

1. பாசுர முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  ‘தனதேயுலகு’ என்றதனை நோக்கி, ‘வகுத்த சர்வேசுவரனிடத்திலே’
  என்கிறார். ‘அடியார்க்கு இன்பமாரியே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
  ‘ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. ஸ்ரீராமா. யுத். 21 : 6. இந்தச் சுலோகத்திலுள்ள ‘அரிசூதன :’ என்ற
  பதத்தைத் திருவுள்ளம் பற்றிக் ‘கிடந்த கிடையிலே இலங்கை
  குடிவாங்கும்படியாக’ என்று அருளிச்செய்கிறார். ‘பிரதி’ என்ற பதத்தைத்
  திருவுள்ளம் பற்றி ‘ஒரு கடல்’ என்று அருளிச்செய்கிறார்.