|
New Page 1
கொண்டு வந்தீர்கோள்;
அவர்க்குச் சார்த்துகிற அணுக்கனை இட்டீர்கோள்; நான் அதன்கீழ்ப் போவேனோ? என்னை வெயிலிலே
கொண்டு போனீர்கோள்; என் உடம்பிலே நெருப்பை வழியட்டினாற்போலே அவர் சார்த்துகிறவற்றைப்
பூசினீர்கோள்; அரிகண்டம் இட்டாற்போலே அவர் சார்த்துகிற ஆபரணத்தைப் பூட்டினீர்கோள்:
நீங்கள் செய்த செயலுக்கு இவனைக்கொண்டு அல்லது போகேன்,’ என்று வலித்ததாம்; ஆகையால், அவற்றுக்குச்
சேராது.
நீர் - பகவானிடத்தில்
பத்தியினால் பரவசப்படக்கூடிய நீங்கள். அணங்கு ஆடும் 1இளந்தெய்வம் அன்று இது -
தெய்வம் ஏறினவராய்க்கொண்டு ஆடுகிற மறுமுட்டுப் பொறாத அற்பத் தேவர்கள் காரணமாக வந்த நோய்
அன்று இது. திசைப்பு இன்றியே - இவள் நோயின் காரணத்தில் அறிவு கெட்டாற்போலே பரிஹாரத்திலும்
அறிவு கெடாமல். 2‘காரணத்தில் கலக்கம் பிறந்தாலும் பரிஹாரத்தில் கலக்கம் பிறவாதொழியவே
நோய் நீங்குமே அன்றோ! நாங்கள் காரணத்தில் அறிவு கெட்ட பாகம் என்? பரிஹாரத்தில் அறிவு
கெடாத வழி என்?’ என்னில், சொல்லுகிறாள் மேல் : சங்கு சக்கரம் என்று - 3‘சங்கு
எனும் சக்கரம் என்னும்’ என்றே அன்றோ இவள் நோய் இருப்பது? ஆதலால், நீங்களும் சங்கு சக்கரம்
என்று பரிஹரிக்கப் பாருங்கோள். 4நோய் வந்த வழியை அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ?
5‘சங்கு எனும் சக்கரம்
_____________________________________________________
1. ‘இளந்தெய்வம்’
என்றது, காரிய காரண உபசாரம். ‘பெருந்தெய்வம்’ என்பது
போன்று கொள்க. மறுமுட்டுப் பொறாத -
பின்னை ஒரு காரியத்துக்கும்
ஆகாத.
2. ‘பரிஹாரத்தில்
கலக்கம் இல்லாமை கொண்டு காரிய சித்தியாகுமோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘காரணத்தில்’ என்று தொடங்கி. காரணம்
- சங்கு சக்கரம். பரிஹாரம் - அவற்றைச்
சொல்லுதல்.
3. ‘காரணம், சங்கு
சக்கரங்கள் என்று அறியும்படி எப்படி?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘சங்கு எனும்’
என்று தொடங்கி. இது, திருவாய்.
4. 2 : 9.
4. ‘நோய் அதுவானால் பரிஹாரமும்
அதுவாக வேண்டுமோ?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘நோய் வந்த வழியை’ என்று தொடங்கி.
5. ‘எங்களுக்கு நோய் வந்த
வழியை அறியும் பிரகாரம் யாது?’ என்ன,
அதற்குவிடை அருளிச்செய்கிறார்,’ ‘சங்கு எனும்’ என்று
தொடங்கி. இது,
திருவாய். 4. 2 : 9.
‘நோய்நாடி நோய்முதல் நாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்
செயல்.’
என்பது திருக்குறள்.
|