|
New Page 1
பைம்பூம்பள்ளி - காட்சிக்கு
இனியதாய்க் குளிர்ந்து பரந்த பூக்களாலே செய்யப்பட்ட படுக்கையிலே. ‘அவன் இப் படுக்கையிலே
வைத்துத் ‘திருவருள் பணிமின்’ என்றால், அவர்கள் செய்வது என்?’ என்னில், அணி மென்குழலார்
- அவன் கொண்டாடுகிற கொண்டாட்டத்தில் விருப்பம் இன்றி, ஆபரணத்தைத் திருத்துவது குழலைப் பேணுவது
ஆகாநிற்பர்கள். இன்பக்கலவி அமுது உண்டார் - அவர்களுடைய 1அந்த ஊடலை முதலாகக்
கொண்டதான கலவியால் வந்த ஆனந்த அமிருதத்தை உண்டவர்கள். அன்றிக்கே, 2‘விருப்பம்
இன்மையாகிற அமிருதத்தை உண்டவர்கள்’ என்னுதல். 3‘அல்லி மலர் மகள் போக மயக்குகளைப்
பின்பற்றுகிறார்கள்’ என்பதனைத் தெரிவித்தபடி.
4வேறு
ஒருவன் வந்து அவர்களைக் கொண்டு சென்று இன்பக்கலவி அமுது உண்ணாநிற்குமோ? இவன் பின்னைத்
_____________________________________________________
1. ‘ஊடல் உணர்தல்
புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற
பயன்.’
‘ஊடுதல் காமத்திற்
கின்பம்; அதற்குஇன்பம்
கூடி முயங்கப் பெறின்.’
2. ‘உணலினும் உண்டது
அறலினிது; காமம்
புணர்தலின்
ஊடல் இனிது.’
‘ஊடிப் பெறுகுவங்
கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் றோன்றிய உப்பு!’
என்னும் குறட்பாக்களை இங்கு
நினைவு கூர்க.
3. திருவாய்மொழி,
3. 10 : 8.
4. மேலே
கூறப்போகும் விஷயத்திற்கு அவதாரிகை அருளிச் செய்கிறார்,
‘வேறு ஒருவன்’ என்று தொடங்கி.
|