பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
224

என

என்று சொல்லிக்கொள்ளவும் வேண்டுமோ? ‘மருந்தாம்’ என்றபடி. அங்கு ஓர் மாயவலவை சொற்கொண்டு - வஞ்சனையுடையவளாய் நெஞ்சில் தோற்றியவைகளையே சொல்லக்கூடியவளான இவள் வார்த்தையைக் கேட்டு. ‘அங்கு ஓர்’ என்று விருப்பம் இல்லாமையைத் தெரிவிக்கிறாள். நீர் - 1சத்துவ குணத்தை உடையவர்களாய், பகவத் விஷயமல்லது சொல்லாதவர்களாய், நேர்மையாளர்களாயிருக்குமவர்கள் வார்த்தையைக் கேட்கக்கூடிய நீங்கள் படும் எளிவரவே! அன்றிக்கே, 2 ‘போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே?’ என்ற சத்துவ குணமுடையார் அமுது செய்த பிரசாதத்தின் பெருமையை அறிந்த நீங்கள். என்றது, ‘சத்துவகுணமுடைய அன்னமல்லது தொடக்கூடியவர் அல்லாத நீங்கள்’ என்றபடி. கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் - தாமச அன்னமும் அதனோடு தோள் தீண்டியான இராஜச அன்னமும். களன் இழைத்து என் பயன் - இராஜச தாமச தேவதைகளுக்கு அவ்வத்தெய்வங்கள் வந்து தங்கியிருக்கும் இடங்களிலே இராஜசமாயும் தாமசமாயுமுள்ள சோற்றினைக் கொண்டு இடச் சொல்லுகிற முறையிலே இட்டால் என்ன பிரயோஜனம் உண்டு? பிரயோஜனம் இல்லாமை மாத்திரமேயன்று; அழிவோடே முடியும். களன் - ‘களம்’ என்றபடி. இழைக்கை - இடுகை.

    என்றது, புன்சிறு தெய்வங்கள் வந்து தங்கியிருக்கும் நாற்சந்தி தொடக்கமானவற்றிலே அவற்றுக்குச் சொல்லுகிற நியமங்களோடே படைத்தலைக் குறித்தபடி. 3‘பிரளய

_____________________________________________________

1. ‘நீர் மாய வலவை சொற்கொண்டு’ என்று கூட்டி, ‘மாய வலவை’ என்றதற்குப்
  பிரதிகோடியாக ‘நீர்’ என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘சத்துவ
  குணத்தையுடையவர்களாய்’ என்று தொடங்கி.

2. இனி, ‘நீர்’ என்பதனை, மேலே வருகின்ற ‘கருஞ்சோறும்’ என்றதனோடு
  கூட்டி பாவம் அருளிச்செய்கிறார், ‘போனகம் செய்த சேடம்’ என்று
  தொடங்கி. ‘போனகம் செய்த சேடம்’ என்பது, திருமாலை, 41ஆம் பாசுரம்.
  ஆக, ‘‘நீர்’ என்றதற்கு ‘ஞானிகள் பக்கல் கேட்கக் கூடிய நீங்கள்’ என்றும்,
  ‘தருவரேல் புனிதமன்றே’ என்ற பிரசாத வைபவம் அறிந்த நீங்கள் என்றும்
  இரு வகையான கருத்து அருளிச்செய்தபடி.

3. ‘விழுங்கி உமிழ்ந்திட்ட’ என்றதனை மேலே கூறியதற்குத் திருஷ்டாந்த
  பரமாக்கி, பாவம் அருளிச்செய்கிறார், ‘பிரளய காலத்தில்’ என்று தொடங்கி.