பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
239

சர

சர்வேசுவரனைச் சொல்லுமாறு போலே, ‘இவன் இன்னது செய்தான், இன்னது செய்தான்,’ என்று சொல்லா நிற்பர்களேயன்றோ? அதனைத் தெரிவித்தபடி. நாழ் என்பது குற்றத்திற்கும் இல்லாததனைச் சொல்லுகைக்கும் ‘நான்’ என்று அபிமானித்திருக்கைக்கும் பேர். நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் -நீங்கள் தெய்வம் ஏறினவர்களாய்க்கொண்டு ஆடுகின்ற இப்பொய் என்கண்களுக்கு ஒரு பொருளாய்த் தோற்றுகிறது இல்லை. 1‘பலவகைப்பட்ட பொருள்கள் இல்லை,’ என்கிறபடியே, ‘அவனை ஒழிந்தது ஒரு தெய்வத்திற்கு அவன் துணை இன்றித் தானே ஒரு பொருளாய் இருக்கும் தன்மை உண்டு,’ என்று இருக்கில் அன்றோ அவர்கள் செய்வது ‘மெய்’ என்று தோற்றுவது?

    ‘நாங்கள் செய்கிறவை பொய்யாகில், நீ சொல்லுகிறது மெய்யாய் எவ்வளவு பலிக்கும்?’ என்ன, ஏழ்மை பிறப்புக்கும் சேமம் - எல்லாப் பிறவிகளிலும் காவலாம்; 2ஒரு நன்மை உண்டானால், அதனை ஏழ் ஏழாகச் சொல்லக் கடவதன்றோ? அதனால், ‘ஏழ்மை’ என்கிறாள். அன்றிக்கே, ‘தண்ணிதான பிறவி’ என்னலுமாம். ஏழ்மை - தண்மை. ‘நாங்கள் பிறவிகளிற்காவலாமதுவோ தேடுகிறது? இவள் நோய்க்குப் பரிஹாரம் அன்றோ? அதனைச் சொல்லாதே மற்று ஒன்றைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘ஆகில், 3சம்பு அறுத்து ஆர்க்கைக்குப் போக வேண்டுமோ? இந்நோய்க்கும் ஈதே மருந்து - 4அடிபற்றின மருந்து அன்றோ? ஊழ்மையில் - முறையிலே; ஊழ் -

_____________________________________________________

1. ‘தோற்றாமைக்குக் காரணம் யாது?’ என்ன, ‘பலவகைப்பட்ட’ என்று
  தொடங்கி. அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது, கடவல்லி உப. 2.4:11.

2. ‘ஏழ்மைப் பிறப்பு’ என்றது, எல்லாப் பிறவிகளையும் காட்டுகிறது என்று
  பொருள் கூறத் திருவுள்ளம் பற்றி, அதற்குக் காரணம் காட்டுகிறார், ‘ஒரு
  நன்மை’ என்று தொடங்கி.

3. ‘சம்பு அறுத்து ஆர்க்கைக்குப் போகவேண்டுமோ?’ என்றது, சம்பை
  அறுத்தவர்கள், அதனைக் கட்டுவதற்கு வேறொரு சாதனத்தைத்
  தேடிக்கொண்டு போக வேண்டுமோ? அதனைக் கட்டுதற்கும் அதுவே
  சாதனமாய் இருக்குமேயன்றோ?’ என்றபடி.

4. ‘அடி பற்றின மருந்து’ என்றது, ‘கழல் வாழ்த்துமின்’ என்றதனைத்
  திருவுள்ளம் பற்றி. அடி பற்றின மருந்து - திருவடிகளைப் பற்றின மருந்து;
  சாரமான மருந்து.