பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
262

அற

அறிவித்து, இப்போது நான் கூப்பிட முகங்காட்டாதே எழவாங்கி இருத்தல் போருமோ?’ என்கிறார்.

    கொள்ள மாளா இன்பவெள்ளம் - அனுபவிக்க அனுபவிக்கக் குறை பிறவாதபடியான ஆனந்த மாக்கடல்; 1 ‘வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்,’ என்றதனைச் சொல்லுகிறார். கோது இல தந்திடும் -ஆனந்தத்திற்குக் கோது ஆகிறது, ‘அனுபவித்தால் அமையும்’ என்றிருத்தல்; வேறு விஷயங்களிலே ஆசையை உண்டாக்குதல் செய்கை; இஃது அங்ஙன் அன்றிக்கே, அனுபவிக்க அனுபவிக்கத் தன் பக்கலிலே ஆசையைப் பிறப்பித்து, இதர விஷய வைராக்கியத்தையும் பிறப்பிப்பதான ஆனந்தமாதலின், ‘கோதில’ என்கிறார். ஆக, ‘கோது இலவாய்க் கொள்ளக்கொள்ள மாளாதபடியான ஆனந்த வெள்ளத்தைத் தந்தவன்’ என்றபடி.

    என் வள்ளலேயோ - தருகிற போது உன் பேறாகத் தந்து, இப்போது பேறு என்னது ஆக்கி, நான் கூப்பிட இருக்கிறாயே? வள்ளல்தனமாவது, தன் பேறாகக் கொடுத்தலே அன்றோ? 2‘ஆனந்தமய’, ‘ஆனந்தோ பிரஹ்ம’ என்கிற தன்னை உபகரித்தபடி அன்றோ? 3இப்படி இப்போது கூப்பிடப் பண்ண நினைத்திருந்தால், ‘வீற்றிருந்தேழுல’கிலே அப்படி என்னை அனுபவிப்பிக்க வேண்டுமோ?’ என்கிறார். 4சிறியதுக்கு இனியது இட்டுக் கெடுத்தான்காணும். 5‘சிறியன்’ என்றாரே தம்மை. வையம் கொண்ட வாமனாவோ - இரந்தார்க்குக் கொடுக்கைக்காக நீ இரக்குமவன் அன்றோ? ‘மூன்று உலக ஆட்சியையும் இழந்தேன்’ என்று காலிலே விழுந்த

_____________________________________________________

1. ‘அவன்தான் இவர்க்கு ஆனந்தத்தைக் கொடுத்தானோ?’ என்ன, ‘வீவில்’
  என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது, திருவாய். 4.5:3.

2. ‘தன் பேறாக உபகரித்தது எதனை?’ என்ன, ‘இன்பவெள்ளம்’ என்றதனைக்
  கடாக்ஷித்து அருளிச்செய்கிறார், ‘ஆனந்தமய:’ என்று தொடங்கி.

3. ‘வள்ளலேயோ!’ என்றதனால், போதரும் மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார், ‘இப்படி’ என்று தொடங்கி.

4. மேற்பாசுரத்தில் ‘சிறியன்’ என்றதனைக் கடாக்ஷித்து ரசோக்தியாக
  அருளிச்செய்கிறார், ‘சிறியதுக்கு’ என்று தொடங்கி.

5. ‘இவர்தாம் சிறியரோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘சிறியன்’
  என்று தொடங்கி.