|
New Page 2
போக்குகைக்குப் பரிகரமானவனுமான
திருவாழியை உடையவனே!’ என்னுதல். ஆழ்கடலைக் கடைந்த துப்பனே - உன்னை விரும்பாமல் ‘வேறு பிரயோசனங்களே
அமையும்’ என்னுமவர்களுக்கும் 1‘அளவிட முடியாத கடல்’ என்கிறபடியே, ஒருவரால் அளவிட
ஒண்ணாதபடியான கடலைக் கடைந்து கொடுத்த ஆற்றலை உடையவனே!
உன் தோள்கள் நான்கும்
கண்டிடக்கூடுங்கொல் என்று - ‘உன் தோள்கள் நான்கனையும் கண்டேனாய்விடக் கூடுமோ?’ என்று.
2அவர்களைப் போன்று உப்புச்சாறு கொண்டுபோமவர் அல்லரே இவர்! அந்தக் கடலைக்
கடைகிறபோது பரந்திருந்த தோள்களைக் காணக்காணும் இவர் ஆசைப்படுகிறது. மதுரக் கொழுஞ்சாறு
கொண்ட சுந்தரத்தோள்களே அன்றோ அவை?
எப்பொழுதும் கண்ணநீர்
கொண்டு - கிடைப்பதற்குத் தகுதியுள்ள நிலம் போலே கண்ணநீர் பாயாநிற்பர் ஆயிற்று. ஆவி -
என் உயிரானது, துவர்ந்து துவர்ந்து - பசையற உலர்ந்து. அன்றிக்கே, ‘இங்ஙனம் உலர்ந்து முடிந்து
போகவும் பெறாமல், குணாதிக விஷயமாகையாலே ‘காணலாம்’ என்னும் நசை முடியவும் ஒட்டாமையாலே, தரிப்பது
மீண்டும் உலருவதான நிலை 3உருவச் செல்லுமாயிற்று,’ என்னுதல். என்றது, ‘சென்றற்றது,
சென்றற்றது’ என்னும் நிலை ‘முடியச் செல்லுகின்றது’ என்றபடி. இப்பொழுதே வந்திடாய் என்று - தம்
துன்பமே 4செப்பேடாக அரைக்கணமும் தாழாமல் வரவேண்டும் என்று. நோக்குவனே -
வருவதற்குச் சம்பாவனையுள்ள திசையைப் பாராநிற்பன்.
‘வருகைக்கு அவன்
பக்கலிலும் ஏதேனும் நினைவு உண்டாயோ இவர் இப்படிச் செய்கிறது?’ என்னில்,
_____________________________________________________
1. ஸ்ரீ ராமா. யுத்.
14 : 31.
2. ‘ஆழ்கடலைக் கடைந்த’
என்றதனையும் கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்,
‘அவர்களைப்போன்று’ என்று தொடங்கி. உப்புச்சாறு
- அமிர்தம். ‘பின்னை
எப்படிப்பட்டவர் இவர்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அந்தக்
கடலை’ என்று தொடங்கி. ‘தோள்கள் அப்படிக் கவர்ச் சிகரமாயிருக்குமோ?’
என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மதுரம்’ என்று தொடங்கி. இது,
நாய்ச்சியார் திருமொழி,
9 : 1.
3. உருவச்செல்லுதல் - முடியச்செல்லுதல்.
4. செப்பேடு
- தாமிர சாசனம்.
|