பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
280

கண

    கண்டுகொண்டு - 1‘காண விரும்பும் என் கண்கள்’ என்கிறபடியே, காணப்பெறாமல் பட்டினி விட்ட கண்கள் பட்டினி தீரும்படி கண்டுகொண்டு. 2‘அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானைக் கண்ணாரக் கண்டுகொண்டு’ என்கிறபடியே, இக்கண்களின் வயிறு ஆரக் கண்டுகொண்டு. என்கைகள் ஆர - 3‘தாயவனே என்று தடவும் என்கைகள்’ என்கிற கைகளின் உறாவுதல் தீரும்படியாக. கலியர், ‘வயிறார உண்ண’ என்னுமாறு போன்று, ‘கைகள் ஆர’ என்கிறார். நின் திருப்பாதங்கள் மேல் - உனக்குத் 4தாரகமுமாய் இனிய பொருளுமான திருவடிகளிலே. பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலம் ஆதலின், தாரகம் தானேயாய் நின்றது.

    அன்றிக்கே, 5‘உன் தேனே மலரும் பாதமாதலின், எனக்கு வகுத்ததுமாய் இனிய பொருளுமான உன் திருவடிகளிலே’ என்னுதல். 6முன்பும் விஷயங்களிலே தொடர்ந்து செல்லுமது உண்டே அன்றோ? அங்ஙன் அன்றிக்கே, அடையத் தக்கவனாக உன் திருவடிகளிலே; 7‘உன்னுடைய

_____________________________________________________

1. ‘கண்டு’ என்னாமல், ‘கண்டுகொண்டு’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘காண விரும்பும்’ என்று தொடங்கி. இது, திருவாய். 3. 8 : 4.

2. ‘‘கண்டுகொண்டு’ என்றால், ‘பட்டினி தீரும்படி கண்டுகொண்டு’ என்ற
  பொருளைக் காட்டுமோ?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘அரவிந்தம்’ என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி. 2. 5 : 8.
  இத்திருப்பாசுரத்தில் ‘கண்ணார’ என்றதிலே நோக்கு.

3. திருவாய்மொழி,  3. 8 : 3. ‘ஆர’ என்றதற்குத் திருஷ்டாந்தம், ‘கலியர்’
  என்று தொடங்குவது.

4. ‘திரு’ என்றதனாலே, போக்கியமும், ‘பாதம்’ என்றதனாலே, தாரகமும்
  பெறப்படுதலின், ‘தாரகமுமாய் இனிய பொருளுமான’ என்கிறார். திருவடிகள்
  இறைவனுக்குத் தாரகமும் போக்கியமுமாய் இருப்பதற்கு மேற்கோள்,
  ‘பிடித்துச் சுவைத்து’ என்று தொடங்கும் திருப்பாசுரம். இது, பெரியாழ்வார்
  திருமொழி 1. 2 : 1.
‘சுவைத்துண்ணும் பாதம்’ என்றதிலே நோக்கு.      

5. திருவாய். 1. 5 : 5.  ‘நின் திருப்பாதம்’ என்றதிலே நோக்காக ‘எனக்கு
  வகுத்ததுமாய்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

6. ‘‘போக்கியமான’ என்றால், போராதோ? ‘வகுத்ததுமாய்’ என்றதற்குக்
  கருத்து என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘முன்பும்’ என்று
  தொடங்கி.

7. ‘போக்கியதையுண்டானாலும் அடையத்தக்கதாய் இராதாகில், அது
  தியாஜ்யம்,’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘உன்னுடைய’ என்று
  தொடங்கி. இது, மாலதீ மாதவ நாடகம்.