பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
286

அலந

அலந்தேன் - வருகைக்குத் தகுதியுள்ள திசையைப்பார்த்து நின்று வெறுத்தேன். 1‘பெரிய ஆபத்தை அடைந்தவனாய்’ என்னுமளவே அன்றோ? பாவியேன் காண்கின்றிலேன் - 2ஆபத்திற்குத் துணைவனாய் இருக்க, மஹா பாவி ஆகையாலே நான் காணப்பெறுகின்றிலேன். 3‘காணப்பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம்படி நெஞ்சில் பிரகாசிக்காமல் ஒழியத்தான் பெற்றேனோ?’ என்கிறார் மேல் :

    மிக்க ஞான மூர்த்தியாய் நிறைந்த ஞானத்தையே சொரூபமாக உடையவனான. வேத விளக்கினை - 4வேதமாகிற விளக்காலே காணப்படுமவனை. அன்றிக்கே, ‘வேதத்தைப் பிரகாசிக்கச் செய்கின்றவனை’ என்னலும் ஆம்; என்றது,’ வேதத்திற்கு விளக்காய் இருப்பவன்’ என்றபடி. என் தக்க ஞானக் கண்களால் கண்டு தழுவுவன் - எனக்குத் தக்காற்போலே ஒரு ஞானக்கண் உண்டாய், அதனாலே கண்டு அனுபவிப்பன். 5காணப் பெறாமையாலே அன்பு துக்கத்திற்குக் காரணம் ஆகிறாப்போலே, நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம் ஆகிறாப்போலே, நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம் ஆகாநின்றது. என்றது, ‘மயர்வு அற மதிநலம் அருளினன்’ என்கிற ஞானபத்திகள் இரண்டும்

_____________________________________________________

1. ‘வெறுக்கிறது என்? கணநேரம் தரிக்க ஒண்ணாதோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘பெரிய ஆபத்தை’ என்று தொடங்கி. இது, விஷ்ணு
  தர்மம்,
68; முதலையால் பீடிக்கப்பட்டு வருந்திய கஜேந்திராழ்வான்
  செய்தியைக் கூறுவது.

2. ‘அலந்தேன்’ என்று ஆபத்தின் மிகுதி சொல்லுகையாலே, பொருளாற்றலால்
  சித்திக்கின்ற ஆபத்திற்குத் துணைவனாகும் அவன் தன்மையை
  அருளிச்செய்கிறார், ‘ஆபத்திற்கு’ என்று தொடங்கி.

3. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘காணப்பெறாது’ என்று
  தொடங்கி.

4. ‘வேத விளக்கினை’ என்பதற்கு இரண்டு பொருள் அருளிச்செய்கிறார்:
  முதலது, ‘வேதத்தைத் தனக்கு விளக்காகவுடையவன்’ என்பது; ‘வேதத்தாலே
  பிரதிபாதிக்கப்படுகின்றவன்’ என்றபடி. இரண்டாவது, ‘வேதத்துக்கு விளக்கு’
  என்பது.

5. ‘ஞானக்கண்களாலே காண்கை நல்லதன்றோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘காணப்பெறாமையாலே’ என்று தொடங்கி.