|
ந
நிறையினால் குறை
இல்லா - 1கிருஷ்ணன், தன்னைப் பெறுகைக்கு எருதுகளின்மேல் விழுகிற செயல்களில் தான்
வேறுபடாதவளாய் இருக்கிற பெண் தன்மையில் குறைவற்றிருக்கை. என்றது, வேறுபடுதற்குக் காரணம் உண்டாய்
இருக்கத் தான் வேறுபடாதவளாய் இருந்தபடி. நெடும்பணைத்தோள் -மேல் ஆத்தும குணம்சொல்லிற்று;
இங்கு உருவத்தின் குணம் சொல்லுகிறது. 2‘நெடியதாய்ப் பணைத்த தோள்’ என்னுதல்;
‘நெடிய மூங்கில் போலே இருந்த தோள்’ என்னுதல். இதனால், 3‘அரியன செய்தும் பெற
வேண்டும்படிகாணும் வடிவழகு இருப்பது’ என்பதனைத் தெரிவித்தபடி.
மடம் பின்னை -
மிருதுத்தன்மையுடையவள். முலை அணைவான் -சேர்க்கைக்காக. பொறையினால் - துன்பத்தைப் பொறுக்குந்தன்மையனாய்.
என்றது, ‘எருதுகளின் கொம்பாலும் குளம்பாலும் நெருக்குண்ட இதனை, அவள் முலையாலே பிறந்த 4விமர்த்தமாக
நினைத்திருந்தான்,’ என்றபடி. பொரு விடை ஏழ் அடர்த்து - கேவலம் இடபங்கள் அல்ல கண்டீர்,
அசுர ஆவேசத்தாலே யுத்த சன்னத்தங்களாய் வந்தவை ஆதலின், ‘பொரு விடை’ என்கிறது. ஒன்று
இரண்டு அல்ல; ஏழு ஆதலின், ‘ஏழ்’ என்கிறது. அவற்றை ஒருகாலே ஊட்டியாக நெரித்து. உகந்த -
‘இனி நாம் இவளைப் பெற்றோமே!’ என்று உகந்தான். நப்பின்னைப்பிராட்டியை 5விடைகொண்டு
வந்து காணும் கைப்பிடித்தது. ‘நிறையினால் குறையில்லா நெடும்பணைத் தோள் மடப்பின்னை முலை
அணைவான் பொறையினால் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த’ எனக் கூட்டுக.
_____________________________________________________
1. நிறையின் தன்மையை விளக்குகிறார், ‘கிருஷ்ணன்’ என்று
தொடங்கி.
2. ‘பணை’ என்பதற்குப்
பருத்த என்றும், மூங்கில் என்றும் இரு பொருள்
உண்டு.
3. ‘பொரு விடை ஏழ் அடர்த்து
உகந்த’ என்றதனையுங்கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார், ‘அரியன செய்தும்’ என்று தொடங்கி.
4. விமர்த்தம் - இடித்தல்.
ஊட்டி - கழுத்து. ஏழ் எருதுகளின் கழுத்துகளையும்
கூட்டி ஒரு காலே முரித்ததனைத் தெரிவித்தபடி.
5. ‘விடை
கொண்டு’ என்றது, சிலேடை : ‘இடபங்களைக் கொண்டு’ என்பதும்,
‘சேஷத்துவம் தோன்ற’ என்பதும்
பொருள்.
|