|
எ
எழுந்தருளின போதை நிறம்போலே
அவனுடைய வெறுப்புக்கு விஷயமான நிறம் நமக்கு என் செய்ய?’ என்றபடி. 1‘இவளைப்
போன்று மற்றைப்பிராட்டிமாரில் இப்படி நிறத்தைப் பற்றிச் சொன்னார் இலரே? முதற்பாட்டில்
‘மணி மாமை குறையிலம்’ என்றாள்; இப்பாட்டில் ‘தளிர் நிறத்தால் குறையிலம்’ என்கிறாள்;
இவற்றுக்கு வாசி என்?’ என்னில், அங்கு, ‘மணிமாமை’ என்று அழகையும் மென்மையையும் சொல்லிற்று;
இங்கு, நிறத்தைச் சொல்லிற்று. அன்றிக்கே, அங்கு நிறத்தைச் சொல்லிற்றாகில், இங்குச் சேர்க்கையால்
உண்டாய அழகிய நிறத்தைச் சொல்லுகிறது.
2தீக்ஷிதம்
- ‘உறுப்புத்தோலும் வெண்ணெய் பூசின உடம்புமான யஜமான வேஷத்தோடே நின்ற நிலையைக் காண ஆசைப்படாநின்றேன்’
என்கிறாள். விரத சம்பந்நம் - முனிவன் ஒரு பட்டினி விடச்சொன்னானாகில், ‘இவன் நம்முடைய மென்மைத்
தன்மைக்குப் பொறாது என்று சொன்னானித்தனை,’ என்று நினைத்து, நான்கு பட்டினி விட ஒருப்படுவாராயிற்றுத்
தர்ம சிந்தையாலே. வராஜிந தரம் - கூறையுடையையும் காற்கடைக்கொள்ள வேண்டும்படியிருக்கை.
சுசிம் - ‘ஒரு பெண்ணையும் தீண்டலாகாது; தர்மபத்நியாகையாலே பிராட்டியைத் தீண்டினால்
வருவதொரு குற்றம் இல்லையேயன்றோ?’ ஆன பின்னர், அஃதொழியப் பரிஹரிப்பது’ என்றால், அது
தன்னிலும் ஐயங்கொண்டு, பிராட்டியுடைய திருப்பரிவட்டம் தாக்கினாலும் முழுகத் தேடா நிற்பர்.
குரங்கசிருங்கபாணிஞ்ச - ‘வில்லையுடையவர், ஏகவஸ்திர தரோ தந்வீ - ஒரே வஸ்திரத்தைத் தரித்தவர்,’
என்னுமதைக்காட்டிலும், கையும் கலைக்கொம்புமாய் இருக்குமதுதானே போந்திருக்கை? பஸ்யந்தீத்வா
பஜாம்யஹம் - பகவானைத் துதி செய்வார் செய்வனவெல்லாம் இவ்வுலக இன்பத்துக்கேயன்றோ? ஆகையாலே,
இவ்வுலக
_____________________________________________________
1.
இவளைப்போன்று - ஆழ்வாராகிய நாயகியைப் போன்று. ‘நிறம்’
என்றது.
சிலேடை : முறையும், நிறமும் என்பது பொருள்.
2. மேலே
எடுத்த சுலோகத்திற்கு வியாக்கியானம் அருளிச்செய்கிறார். ‘தீக்ஷிதம்’
என்று தொடங்கி.
கூறையுடை - திருப்பீதாம்பரம். காற்கடைக்கொள்ள -
உபேக்ஷை செய்ய. ‘ஏகவஸ்திரம்’, இது, ஸ்ரீராமா.
ஆரண். 18 : 12. கலை -
மான். ‘திருஷ்டத்துக்கு’ என்றது சிலேடை : ‘காட்சியும், கண்களுக்குப்
பயனும்’ என்பது பொருள்.
|