|
New Page 1
பொ-ரை :
‘கிளர்ந்த ஒளியாலே குறைபாடு இல்லாத நரசிங்க உருவமாய்க் கிளர்ந்து எழுந்து, கிளர்ந்த ஒளியையுடைய
இரணியனுடைய அகன்ற மார்பினைக் கிழித்து மகிழ்ந்த, வளர்கின்ற ஒளியையுடைய பிரகாசம் பொருந்திய
சக்கரத்தையும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கினையும் நீலமணி போன்று வளர்கின்ற ஒளியினையுமுடைய
சர்வேசுவரன் விரும்பாத வரிகளையுடைய வளையல்களால் ஒரு பிரயோஜனத்தையுமுடையோம் அல்லோம்,’
என்கிறாள்.
வி-கு :
கிளர்தல் - மிக்குப்பொலிதல். ‘எழுந்து கிழித்து உகந்த ஒளியான்,’ என்க. அரி - சிங்கம்.
வரி - அழகு; கீற்றுமாம்.
ஈடு :
ஏழாம் பாட்டு. 1‘பெற்ற தமப்பன் பகையாக, பாலன் ஆனவனுக்கு உதவினவன், தன்னால்
உதவப் பெறாமல் நோவு படுகிற எனக்கு உதவானாகில், நான் ஆபரணம் பூண்டு அலங்கரித்திருக்கின்ற
இவ்வலங்காரம் யார்க்கு?’ என்கிறாள்.
கிளர் ஒளியால்
குறை இல்லா அரி உருவாய் - கிளர்ந்த ஒளியால் குறைவின்றிக்கே இருக்கின்ற நரசிம்ஹமாய்.
2‘ஜ்வலந்தம் -பிரகாசித்துக்கொண்டிருப்பது’ என்கிற மந்திரார்த்தம் தோற்றச்
சொல்லுகிறது. கிளர்ந்து எழுந்து - சீறிக்கொண்டு தோற்றி. என்றது, 3‘பிறை எயிற்று
அன்று அடல் அரியாய்ப் பெருகினானை’ என்கிறபடியே, சிறுக்கன்மேலே அவன் முடுகினவாறே கிளர்ந்தபடி.
கிளர் ஒளிய இரணியன் - மிக்க ஒளியையுடைய இரணியன். ஆசுரமான ஒளியைக் குறித்தபடி. 4நரசிம்ஹமும்
பிற்காலித்து வாங்கும்படி ஆயிற்றுப் பையல் கிளர்த்தி இருந்தபடி. அகல் மார்பம் - அகன்ற
மார்வை :
_____________________________________________________
1. ‘கிளர் ஒளியால் குறையில்லா
அரியுருவாய்’ என்பது போன்றவைகளையும்,
‘கவராத வரிவளையால் குறை இலம்’ என்பதனையும் திருவுள்ளம்
பற்றி
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘நரசிம்ஹ அவதாரத்தில்
ஒளி உண்டோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘ஜ்வலந்தம்’ என்று.
‘உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்.’
என்பது அம்மந்திரமாகும்.
3. பெரிய திருமொழி.
2. 5 : 8.
4. ‘கிளர் ஒளிய இரணியன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘நரசிம்ஹமும்’ என்று தொடங்கி. பையல்
- அற்பன்; இரணியன்.
|