பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
322

விரும்பிலனேயாகில், என்னுடைய மேகலையால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறாள்.

    வரி வளையால் - 1ஸ்ரீ பாஞ்சஜன்யத்தாலே. வளை - சங்கு. குறை இல்லாப் பெருமுழக்கால் - 2‘அந்த ஒலியானது திருதராஷ்டிரன் புத்திரர்களுடைய நெஞ்சுகளைப் பிளந்தது,’ என்றும், 3‘அந்தப் பாஞ்சஜன்யமானது, பாதாளம் ஆகாயம் திக்குகள் திக்குப்பாலர்கள் ஆகிய இவற்றோடு கூடின உலகத்தை நடுங்கச் செய்தது,’ என்றும் கூறப்படுகின்றபடியே, பகைவர்கள் அளவு அல்லாத பெரிய ஒலியாலே. ‘ஹஸ்தேந ராமேண - கையினாலே ஸ்ரீராமனாலே’ என்னுமாறு போன்று, ‘வரிவளையால் பெருமுழக்கால்’ என்பது  வேற்றுமை மயக்கம். அடங்காரை - பகைவர்களை. எரி அழலம் புக ஊதி - எரியாநின்றுள்ள நெருப்பானது அவர்கள் மனங்களிலே புகும்படி ஊதி. என்றது, ‘பய அக்கினி கொளுந்தும்படி செய்து’ என்றபடி. அடியார்களுடைய பகைவர்கள் கழிய ஊதியது 4இவளையிட்டே அன்றோ?

    இருநிலம் முன் துயர் தவிர்த்த - பரப்பையுடைத்தான பூமியில் முன்பே உண்டான துக்கத்தைப் போக்கின. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘முன்பே பிடித்துத் துக்கத்தைப் போக்குமவனாய்ப் போருமவன், இன்று இத்தலையை நோவுபட விட்டிருக்குமாகில், பின்னை எனக்கு என்னுடைமை கொண்டு காரியம் என்?’ என்கிறாள் என்றபடி. 5‘தேவர்களுக்குப் பலம் விருத்தியடைந்தது

_____________________________________________________

1. ‘வரி’ என்பதற்கு ‘அழகு’ என்று பொருள் கூறத் திருவுள்ளம் பற்றி, அதனை
  அருளிச்செய்கிறார், ‘ஸ்ரீ பாஞ்சஜன்யத்தாலே’ என்று. ‘ஸ்ரீ’ என்பதற்கு,
  ‘அழகு’ என்பது பொருள்.

2. ‘குறையில்லா’ என்று கூறிப் பின்னர், ‘பெருமுழக்கால்’ என்பதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார், ‘அந்த ஒலியானது’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ கீதை,
  1 : 19.

3. பாரதம், துரோண பர்.

4. ‘இவளையிட்டேயன்றோ?’ என்றது, சிலேடை : ‘இந்தப் பாஞ்சஜன்யம்
  என்னும் சங்கைக் கொண்டேயன்றோ?’ என்பது நேர்ப்பொருள். ‘இவள்
  காரணமாக அல்லவா?’ என்பது தொனிப்பொருள். சங்கு என்ற பொருளில்
  ‘இவ்வளை’ என்று ஒற்று மிகுக்க.

5. ‘ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் ஒலி அனுபவிக்கப்படுகின்ற பொருளாயிருக்க,
  அதனை இவள் ‘விரோதி நிராசகம்’ என்பான் என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘தேவர்களுக்கு’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ விஷ்ணு
  புரா
. 5. 23 : 26.