பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
327

அன

அன்றோ எல்லோர்க்கும்? அவ்வளவிலும் 1யுத்த கண்டூதி மிக்கு, ‘எனக்கு எதிரியாய் இருப்பான் ஒருவனைக் காட்டவேண்டும்,’ என்று வேண்டிக்கொள்ளும்படியான பெருமிடுக்கையுடையவனாதலின், ‘விறல் வாணன்’ என்கிறது. புயம் துணித்து - ‘இவன் அறக் கை விஞ்சினான்!’ என்று கரத்தைக் கழித்துவிட்டான். தலையை அறுத்து வைக்க வேண்டும் குறை உண்டாயிருக்கச் செய்தேயும், ‘உஷை தந்தை அற்றவள் ஆகவொண்ணாது,’ என்று உயிரை நிறுத்தி வைத்துக் கையைமாத்திரம் கழித்தானாகலின், ‘புயம் துணித்து’ என்கிறது.

    நாகமிசைத் துயில்வான்போல் - வாணனுடைய தோள்களாகிய காட்டினைத் துணித்த பின்பு ஆயிற்றுப் 2போகத்தில் பொருந்திற்று. ‘‘துயில்வான் போல்’ என்பது என்? துயில இல்லையோ?’ என்னில், உலகு எல்லாம் நன்கு ஒடுங்க யோகு அணைவான் - ‘இன்னமும் வாணன் போல்வார் எதிரிடுவார் உளராகில் அவர்களையும் அழித்து, ‘உலகத்தார் நம்மையே பற்றிக் கரைமரம் சேரும் விரகு யாதோ?’ என்று இதனையே சிந்தித்துக்கொண்டு யோக நித்திரை செய்யாநிற்பான். கவராத உடம்பினால் குறை இலம் - இப்படி எல்லார் பக்கலிலும் செய்யும் பரிவை அவன் என் பக்கலிலே செய்யாதே இருக்க, நான் என் உடம்பைக் கட்டிக்கொண்டு கிடக்கவோ? 3அவனுக்காகக் கண்ட உடம்பு ஆயிற்று இவளது. அவனுக்கு உறுப்பாகவே அன்றோ 4இவள்தான் இந்தச் சரீரத்தை விரும்புவது?

_____________________________________________________

1. ‘யுத்த கண்டூதி’ என்றது, போர் கிடையாமையால் தோள்களில் உண்டாகும்
  தினவு.

  ‘என்றுகொண் டுண்மை யாதவ னுரைப்ப
      இருபுய வலியின்எண் திசையும்
  சென்றுகொண் டடர்த்துத் தெவ்வர்த முயிரும்
      திறைகளு முறைமுறை கவர்ந்து
  வென்றுகொண் டணிந்த வாகையோன் தினவு
      மிக்கன
எமதிணை மேருக்
 
குன்றுகொண் டமைந்த தோள்கள்எம் முடன்நீர்
      குறித்தமர் புரியும்என் றுரையா’

  என்பது, வில்லிபாரதம்.    

2. ‘போகம்’ என்பது, சிலேடை : ‘பாம்பின்உடலும், போகமும்’ என்பது
  பொருள்.

3. ‘தன் உடம்பு தனக்குப் பேண வேண்டாவோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அவனுக்காக’ என்று தொடங்கி.

4. ‘இவள்தான்’ என்றது, ‘மற்றையோரைப் போன்று உண்மையை
  அறியாதிருக்கையன்றிக்கே, அவனுக்காகவே ‘படைக்கப்பட்டது’ என்ற
  உண்மையை அறியும் இவள்தான்’ என்றபடி.