பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
329

New Page 1

போருவர் இத்தனை அன்றோ?’ என்றது. ‘உயிரிலே ஆயிற்றுக் குறை உண்டாகில் உள்ளது,’ என்றபடி. உயிர் பிரிந்த மலைத்துண்டம் கிடந்தன போல் துணி பலவாத் துணித்து உகந்த - உயிரோடு கூடிச் சஞ்சரிக்கின்ற மலைகள் இந்திரன் கையில் வச்சிராயுதத்தாலே பல கூறு ஆகும்படி துணியுண்டு கிடந்தாற்போலே, அசுரர் கூட்டத்தைத் துணித்து உகந்தான் ஆயிற்று. ‘உயிர் பிரிந்த மலைத் துண்டம் கிடந்தன போல் உடம்பினால் குறை இல்லா அசுரர்குழாம் துணித்து உகந்த’ என்று கூட்டுக. 1‘திருமகள் கேள்வன் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்,’ என்கிறபடியே, சம்பந்தம் எல்லார் பக்கலிலும் உண்டாய் இருக்க, ‘இவர்கள் அடியார்கட்கு விரோதிகள்,’ என்னும் தன்மையாலே இவர்களை அழித்து, ‘அடியார்கட்குப் பகைவர்கள் அழியப் பெற்றோமே அன்றோ!’ என்றத்தாலே உகந்தானாயிற்று.

    தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் உடம்பு உடையான் - மிக்க நீர் வெள்ளத்தையுடைத்தான கங்கையைத் தன் சடையில் ஒரு பக்கத்திலே தரிக்கையால் வந்த செருக்கையுடைய சிவபிரான் ஆனவன், 2பிராட்டி திருமார்வைப் பற்றி, ‘இவ்விடம் என் இருப்பிடம்’ என்று அபிமானித்திருக்குமாறுபோலே, ஒரு பக்கத்தைப் பற்றி ‘இவ்விடம் என் இருப்பிடம்’ என்று அபிமானிக்கும்படி அவனுக்கு இடங்கொடுத்துக்கொண்டிருக்கிற திருமேனியையுடையவன். 3திருமேனியில் இடங்கொடுக்கச்செய்தே, இது தன்னைக் குணமாக விரித்துக்

_____________________________________________________

1. ‘கொலை செய்து அதனைக் கண்டு மகிழ்வது முறையாமோ?’ என்ன,
  ‘திருமகள் கேள்வன்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  இது, ஜிதந்தா. 1 : 2. இச்சுலோகப் பொருளோடு

  ‘அணிமணிப் பைம்பூண் அமரர்க்கு முதல்வன் நீ’
      . . . . . .         . . .   . . .
  அன்னவர் படவல்லா அவுணர்க்கு முதல்வன் நீ;
  அதனால், ‘பகைவர் இவர்;இவர் நட்டோர்’ என்னும்
  வகையும்உண் டோநின் மரபறி வோர்க்கே?’

  என்ற பரிபாடற் பகுதி ஒப்பு நோக்குக.

(பரிபாடல். 3. 53-58)

2. ‘ஒரு கூறு தனி அமர்ந்துறையும் உடம்புடையான்’ என்று கூட்டி பாவம்
  அருளிச்செய்கிறார், ‘பிராட்டி’ என்று தொடங்கி.

3. ‘எல்லார்க்கும் இடமான திருமேனியிலே சிவனுக்கு இடம் கொடுத்தால் இது
  சீலகுணமாக வேண்டுமோ?’ என்ன, ‘திருமேனியில்’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார்.