பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
348

New Page 1

குடல் சம்பந்தத்தை உடையவனே! 1இவற்றிற்கு இவனோடு மெய்யான குடல் சம்பந்தமே அன்றோ? 2இவனுடைய பொய்யோடு மெய்யோடு வாசியற இவனுக்கு இரண்டும் காப்பதற்குக் காரணமாக இருக்கும். கூமாறே விரை - 3சுலபனாய் இவற்றைக் காப்பதற்காகத் திருப்பாற்கடலிலே கூக்குரல் கேட்கைக்காகக் கிட்டி வந்து கிடக்கிற நீ, நான் உன் திருவடிகளை வந்து கிட்டும்படி என்னை அழைத்துக்கொள்வதிலே விரைய வேண்டும். ‘இப்படி விரைய வேண்டுகிறது என்?’ என்னில், கண்டாய் - என்னைக் கண்ட உனக்குவிரையாதே இருக்கலாய் இருந்ததோ? 4‘காட்டிலே கொடியவர்களான இராக்கதர்களாலே பல வகையில் துன்புறுத்தப்பட்ட முனிவர்கள் பலருடைய சரீரங்களைக் கடாக்ஷிக்க வேண்டும்; எழுந்தருளவேண்டும்,’ என்றாற்போலே, ‘பாராய்’ என்று தம் வடிவைக் காட்டுகிறார்.

    ‘ஆனாலும், அநாதி காலம் நீர் பிரியில் தரியாதே போந்த உடம்பும் உற்றாரும் அன்றோ?’ என்ன, அடியேனைக் குறிக்கொண்டே - ‘இந்த உலக வாழ்வில் செல்லாதபடியாய்

_____________________________________________________

1. ரசோக்தியாக அருளிச்செய்கிறார், ‘இவற்றிற்கு’ என்று தொடங்கி. ‘மெய்யான’
  என்றது, சிலேடை : ‘சத்தியமான’ என்பதும், ‘சரீரமான’ என்பதும் பொருள்.
  குடல் சம்பந்தம் - சரீர சரீரி பாவ சம்பந்தம்.

2. பிராசங்கிகமாக அருளிச்செய்கிறார், ‘இவனுடைய’ என்று தொடங்கி.
  ‘இவனுடைய பொய்’ என்றது, கிருஷ்ணாவதாரத்தில் பொய்யை. என்றது,
  ‘ஆயுதம் எடேன்’ என்று கூறி, ஆயுதம் எடுத்தல் போல்வன. ‘இவனுடைய
  மெய்’ என்றது, இராமாவதாரத்தில் மெய்யை. என்றது, அபயப் பிரதான
  விருத்தாந்தத்தை. இனி, ‘இவனுடைய பொய்யோடு மெய்யோடு’ என்றதற்கு,
  ‘நாஸ்தி சப்த வாச்சியமான அசித்தோடு, அஸ்தி சப்த வாச்சியமான
  ஆத்மவஸ்துவோடு’ என்று பொருள் கோடலுமாம். ஈண்டு, ‘இவனுடைய’
  என்பதற்குப் ‘புருஷனுடைய’ என்பது பொருள். ‘இல்லதும் உள்ளதும்’ என்ற
  பாசுர வியாக்கியானம் ஈண்டு நினைவு கூர்க. ‘உடலாயிருக்கும்’ என்றதும்
  சிலேடை : ‘சரீரமாக இருக்கும்’ என்பதும், ‘காரணமாக இருக்கும்’ என்பதும்
  பொருள்.

3. ‘அரவணையாய் கூமாறே விரை’ என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘சுலபனாய்’ என்று தொடங்கி.

4. ‘கண்டாய்’ என்பதற்குச் சம்வாதம் காட்டுகிறார், ‘காட்டிலே’ என்று
  தொடங்கி. இது, ஸ்ரீராமா. ஆரண்ய. 6 : 16. இராமபிரானைப் பார்த்து
  முனிவர்கள் கூறியது.