பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
354

மூடப

மூடப்பட்டவனாய் விரும்புகிறான் என்பதனை இவர் அறிந்தவாறு யாங்ஙனம்?’ எனின், மீளவும் அச்செல்வத்தை அவன் விரும்பும் போது தமோ குணத்தாலே மூடப்பட்டவனாய்த்தானே இருத்தல் வேண்டும்?

    அன்றிக்கே, ‘கொள்’ என்று தூண்டுகிறது, மனமாகவுமாம். அன்றிக்கே, ‘இது அழிவிற்குக் காரணமாம்,’ என்று அறியச் செய்தேயும், இவனுடைய மனத்தைத் தமோ குணத்தாலே மறைப்பித்து, ‘அதனைக் கொள்’ என்று தூண்டி இவனை விரும்பும்படியாகச் செய்யும் இச்செல்வத்தினுடைய வலிமை,’ என்னலுமாம். 1‘மஹாரதரான வீடுமர் இறந்த பின்னரும், துரோணர் இறந்த பின்னரும், கர்ணன் இறந்த பின்னரும், சல்லியன் பாண்டவர்களை வெல்வான் என்ற ஆசையானது அதிகரித்தது,’ என்கிறபடியே, அதிரதர் மஹாரதர் அடையப்பட்டுப்போகாநிற்கச் செய்தேயும், பின்னையும் சல்லியனைக் கொண்டே பாண்டவர்களை வெல்லப் பார்த்தான் அன்றோ துரியோதனன்? இவை என்ன உலகியற்கை - இவை உலக வாழ்வுகள் சில இருக்கிறபடியே!

    வள்ளலே -  2‘செல்வம் அழிவதற்குக் காரணம்’ என்னுமதனை என் நெஞ்சிலே படுத்தி எனக்கு ஒளதார்யத்தைச் செய்தவனே! மணிவண்ணா -மாணிக்கப் பண்டாரத்தை அன்றோ ஒளதார்யம் செய்தது? 3சாதந அநுஷ்டானம், மற்றொன்றனைப் பண்ண அன்றாயிற்று. அன்றிக்கே, ‘செல்வம் முதலானவற்றில் வெறுப்பினைப் பிறப்பித்தது, 4பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று,’

_____________________________________________________

1. ‘அழிவிற்குக் காரணமானவற்றை விரும்புவதற்குக் காரணம் யாது?’ என்ன,
  ‘துராசைதான் காரணம்’ என்று கூறத் திருவுள்ளம் பற்றி, அதற்குப்
  பிரமாணம் காட்டுகிறார், ‘மஹாரதரான’ என்று தொடங்கி. இது, பாரதம்,
  சல்லியபர்வம்.

2. ‘வள்ளலே’ என்றதற்கு இரண்டுவகையான பாவம் அருளிச்செய்கிறார் :
  முன்னையது, செல்வமானது அழிவிற்குக் காரணமானது என்றதனைக் காட்டிய
  ஒளதார்யம்; பின்னையது, விக்கிரஹத்தை ஒளதார்யம் பண்ணியது. மாணிக்கப்
  பண்டாரம் - மாணிக்கபொக்கிஷம்.

3. ‘மாணிக்கப் பண்டாரத்தை’ என்று மேலே அருளிச்செய்த வாக்கியம்
  விவரணம்: ‘சாதநாநுஷ்டானம்’ என்று தொடங்கும் வாக்கியம்.
  ‘மற்றொன்றனை’ என்றது, ஆசாரிய உபதேசத்தை.

4. பிடாத்தை - போர்த்த பச்சை வடத்தை.