பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
356

நீலமணி போன்ற நிறத்தையுடையவனே! நீ என்னை அங்கீகரித்தருளவேண்டும்; அடியேனைக் கலங்கும்படி செய்யாதொழிய வேண்டும்,’ என்கிறார்.

    வி-கு : ‘வாங்கு நீர்’ வியாக்கியானம் பார்க்க. தகர்ப்புண்ணல் -வருத்தத்தை அடைதல்; அழிதல். மறுக்கேல் - கலங்கப்பண்ணாதே.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. ‘பிறப்பு மூப்பு இறப்பு முதலியவைகளாலே நோவுபடுகிற இம்மக்கள் நடுவினின்றும், இவை நடையாடாத தேசத்திலே அழைத்துக்கொண்டருள வேண்டும்,’ என்கிறார்.

    வாங்கு நீர் மலர் உலகில் - இவ்வருகு உண்டான காரியவர்க்கத்தையடையத் தன் பக்கலிலே வாங்காநின்றுள்ள நீரிலே உண்டாய் விரிவடைந்துள்ள உலகத்திலே.  1காரியங்கள் எல்லாம் காரணத்திலே இலயமாகக் கடவன அன்றோ? 2இலயத்தை முன்னிட்டு அன்றோ படைப்பு இருப்பது? அன்றிக்கே, ‘நீராலே சூழப்பட்டதும் திருநாபிக்கமலத்தில் பிறந்ததுமான உலகத்திலே’ என்னுதல். வாங்கு - வளைந்த. திரிவனவும் நிற்பனவும் -தாவரங்களும் சங்கமங்களும், ஆங்கு உயிர்கள் - அந்த அந்தச் சரீரத்திலேயுள்ள ஆத்துமாக்கள். அன்றிக்கே, ‘நிற்பனவும் திரிவனவுமான உயிர்கள்’ என்று கூட்டித் ‘தாவரமாகவும் சங்கமமாகவும் இருக்கின்ற உயிர்கள்’ என்னலுமாம். ‘ஆங்கு’ என்பதனை, மேலே வருகின்ற ‘வாங்கு எனை நீ’ என்றதனோடு கூட்டுக.

    பிறப்பு இறப்பு பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் - பிறப்பு இறப்பு மரணம் முதலியவைகளாலே நெருக்குண்ணாநிற்பர்கள் சமுசாரத்தில் இருக்கும் நாள்கள் முழுதும். இதன்மேல் வெந்நரகம் - இதற்குமேல் போனால் கொடிதான நரகம். ‘இங்கு இருந்த நாள் 3மூலையடியே

_____________________________________________________

1. ‘தண்ணீரோ, எல்லாவற்றையும் வாங்குகிறது?’ என்ன அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘காரியங்கள் எல்லாம்’ என்று தொடங்கி. தண்ணீர்,
  காரணம்; பூமி, காரியம். தண்ணீரினின்றும் பூமி உண்டாயிற்று என்ற சிருஷ்டி
  முறையை நினைவு கூர்க.

2. ‘சிருஷ்டியைச் சொல்லி, பின்பு அழித்தலைச் சொல்ல வேண்டாவோ?’
  என்ன, ‘இலயத்தை’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. மூலையடி - தன் இச்சையின்படி.