|
உன
உன்னை விட்டு ஐம்புல இன்பங்களால்
போது போக்கி இருக்கிற உலகம்.
காட்டேல் -
1திட்டிவிடம் போலே காணில் முடிவன். 2‘இந்த உலக வாழ்வு என் கண்களுக்கு
இலக்கு ஆகாதொழிய வேண்டும் என்கையாலே, இந்த உலக வாழ்வு இவர் கண்களில் பட்டது இல்லையாய்
இருந்தபடி. 3மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று சர்வ சத்தியானவன் இதனைக்
காட்டில் காணுமித்தனை. 4‘ஆனால், ‘இவை என்ன உலகியற்கை,’ என்றதனோடு சேரும்படி
என்?’ என்னில், ‘பரஹிதம்’ என்கிற புத்தியாலே முன்பு நினைந்தார்; ‘இதுதான் வந்து தம்மைக்
கிட்டாதபடி பண்ணவேண்டும்,’ என்கிறார் இத்திருப்பாசுரத்தில்.
(7)
_____________________________________________________
1. ‘‘காட்டேல்’ என்கைக்கு,
‘காட்டினால் வரும் கேடு யாது?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘திட்டிவிடம் போலே’?
என்று தொடங்கி.
திட்டிவிடம் - கண்ணிலே விஷத்தையுடையது ஒரு பாம்பு. திட்டி - கண்.
திருஷ்டி -
திட்டி.
‘கண்கிழித் துமிழ்விடக்
கனல ராவரசு’
(கம்பரா. தாடகை. 10)
‘திட்டியின் விடமன்ன கற்பின்
செல்வியை
விட்டிலை யோ!இது விதியின்
வண்ணமே’
(கம்பரா. கும். 80)
என வருதலைக் காண்க.
‘உண்ணாதே உயிருண்ணா தொருநஞ்சு;
சனகியெனும் பெருநஞ் சுன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே
உயிர்!’
(கம்பரா. இராவணன் வதைப். 220)
என்பதும் அக்கருத்தே பற்றி வந்தது.
2. ‘காட்டேல்’ என்றதனால்
பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘இந்த உலக
வாழ்வு’ என்று தொடங்கி.
3. ‘ஆயின், இப்போது உலக
வாழ்வினை நினைப்பதற்குக் காரணம் யாது?’
என்ன, ‘மயர்வற’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
‘காட்டேலே’ என்கையாலே, ஈசுவரன் தானே காட்டுவதற்கு முன்பு இவர்
காணாமையும்,
ஈசுவரன் தானே காட்டினான் என்பதும் போதரும்.
4. ‘அவன்
காட்டினால், ‘காட்டேலே’ என்று வெறுப்பாகச் சொல்லுவான் என்?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘ஆனால்’ என்று தொடங்கி.
|