New Page 1
கொள்ளுதி. குரை -
1பெருமை;
அன்றிக்கே, ‘ஆபரணங்களின் ஒலி’ என்னுதல். இமையோரும்
தொழாவகை செய்து ஆட்டுதி நீ - பிரமன் முதலான தேவர்களேயாகிலும், நீ நினையாதாரை வந்து கிட்டாதபடி
செய்து அலையச்செய்வை. ‘அரவணையாய்!’ என்ற இவ்விளி, 2‘கூட்டுதி’ என்றதற்கு
உதாஹரணம். 3அடியேனும் அஃது அறிவன் - உலக வேதங்களிலே பிரசித்தமான உன் படியை நானும்
அறிவேன். 4‘அறிந்தபடிதான் என்?’ என்னில், வேட்கை எல்லாம் விடுத்து - எனக்கு
உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப்படுகைக்கு? உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது
உண்டோ? 5யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்திலையோ? உன் திருவடியே
சுமந்து உழல - புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலேயாய், உன் திருவடிகளையே
நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும்படிக்காக. கூட்டரிய திருவடிக்கள் எனைக் கூட்டினை
- யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக்கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச்
சேர்த்துக்கொண்டாய். நான் கண்டேனே - 6இது கேட்டார் வாய்க் கேட்டு நான்
சொல்லுகிறேன் அல்லேன்: அனுபவத்தாலே சொல்லுகிறேன்.
(9)
____________________________________________________
1. ‘பெருமை’ என்றது, இனிமையின்
மிகுதியைக் குறித்தது.
2. திருவனந்தாழ்வானை ஞானமில்லாத
பொருளாகச் சொன்னது, ‘பாம்பு’
என்பது அஃறிணையாதலால், அந்த ஒப்புமை நோக்கி.
3. ‘அடியேனும்’ என்ற உம்மை,
திருவனந்தாழ்வானைத் தழுவுகிறது. ‘அஃது’
என்ற சுட்டு, பிரசித்தியைக் காட்டுகிறது. அந்தப் பிரசித்தியை
அருளிச்செய்கிறார், ‘உலக வேதங்களிலே’ என்று தொடங்கி, ஈண்டு, உலக
சப்தம், இதிகாச புராணங்களைக்
காட்டுகிறது.
4. ‘அறிந்தபடிதான் என்?
என்னில்’ என்றது, ‘சாஸ்திர முகத்தாலே கேட்டு
அறிந்தீரோ?’ என்றபடி.
5. ‘விடுத்து’ என்பதற்குப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘யாதானும்’ என்று
தொடங்கி.
‘யாதானும் பற்றி
நீங்கும் விரதத்தை நல்வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவைத்
திருமாலை வணங்குவனே.’
என்பது திருவிருத.் 95.
6. ‘கண்டேனே’
என்ற ஏகாரத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘இது
கேட்டார் வாய்’ என்று தொடங்கி.
|