| ந 
நீயும். நீயுமே நிலாநிற்ப 
- 1இருவருடையவும் அபிமானத்துக்குள்ளே திரிபாத் விபூதியாக அடங்கிக் கிடக்கும்.
2‘புருஷன் என்பவன் பகவானாகிய நாராயணனே; பெண் என்பவள் பிராட்டியே; இவர்களைத் 
தவிர வேறு பொருள் இல்லை,’ என்னாநிற்க, வாசல்தோறும் ஈசுவரர்களேயன்றோ இங்கு? ஆதலின், 
‘நீயுமே நிலாநிற்ப’ என்கிறது. 
    நிலாநிற்பக் கண்ட 
சதிர், உங்கள் இருவருடையவும் அபிமானத்திலே கிடக்குமதுவே வாழ்க்கையாம்படி நீ பார்த்து வைத்த 
நேர்பாடு. கண்டு - 3‘நினைவிற்கும் எட்டாத, உலகத்திற்கெல்லாம் பதியான மகா 
விஷ்ணுவானவர் நித்திய முத்தர்கள் சூழப் பிராட்டியோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்திலே 
எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே, நீ பார்த்து வைத்த வாய்ப்பான அதனைக் கண்டு. என்றது, 
‘பெரிய பிராட்டியாரும் நீயுமாகச் சேர இருக்கிற உங்கள் இருவருடையவும் அபிமானத்திலே ஓர் உலகமாக 
அடங்கியிருக்கிற இருப்பைக் கண்டேன்,’ என்றபடி. உன் திருவடியே அடைந்தேன் - 4அந்த 
நித்தியசூரிகளோடு ஒரு கோவையாய் உன் திருவடிகளிலே அடிமை செய்யவேண்டும் என்று உன் திருவடிகளைக் 
____________________________________________________ 
1. ‘‘நீயுமே’ என்கிறது என்? 
நித்திய முத்தர்கள் இலரோ?’ என்ன, அதற்குவிடை அருளிச்செய்கிறார், ‘இருவருடையவும்’ என்று தொடங்கி.
 
      திரிபாத் விபூதி - 
பரமபதம். இந்த உலகம் காற்பாகமாகவும், பரமபதம்முக்காற்பாகமாகவும் இருத்தலின், ‘திரிபாத் 
விபூதி’ எனப்படுகிறது.
 
2. ‘உபய விபூதியும் 
ஈசுவரனுக்கு உரியதாயிருக்க, நித்திய விபூதியை மாத்திரம்இருவருடைய அபிமானத்துக்குள்ளே அடங்கிக் 
கிடக்கும் என்று சொல்வது
 என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘புருஷன்’ என்று
 தொடங்கி. 
இது, ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 8 : 35. என்றது, ‘ஈஸ்வரோஹம்’
 என்று கொண்டு பாரதந்திரியத்தை 
இசையாமல் இருப்பர்களேயன்றோ
 இவர்கள்?’ ‘அவர்கள் பாரதந்திரியத்தை இசைந்திருக்கையாலே 
விசேடித்துச்
 சொல்லுகிறார்,’ என்றபடி.
 
3. ‘பரமபதம் இருவருடையவும் அபிமானத்திலே கிடக்கும்,’ என்பதற்குப்பிரமாணம் காட்டுகிறார், ‘நினைவிற்கும் எட்டாத’ என்று 
தொடங்கி.
 
4. ‘கண்ட 
சதிர் கண்டு உன் திருவடி அடைந்தேன்,’ என்றதனாலே பலித்தபொருளை அருளிச்செய்கிறார், ‘அந்த 
நித்தியசூரிகளோடு’ என்று தொடங்கி.
 |