1இவ
1இவ்வருகு
உள்ளனவற்றை நோக்கும்போது ‘விரிந்தது, மேலானது’ என்று இருந்தானே ஆகிலும், அவ்வருகும் கண்டவர்
ஆகையாலே ‘இறுகல்’
என்று இருக்கிறார் இவர். இறப்பு - மோக்ஷம். 2அப்பயன் இல்லையேல் - அந்தப் பகவானுடைய
உபாசனம் இல்லையாகில் ஆத்துமாவைத் தியானம் செய்ய ஒண்ணாது, உபாசனமானது இன்பரூபமாயிருக்கையாலே
அதனைப் ‘பயன்’ என்கிறார். அவனுடைய சாதனம் இவருக்குப் பலமாய் இருக்கிறது. சிறுக நினைவது ஓர்
பாசம் உண்டாம் - 3தன்னை முன்புத்தையிற் காட்டில் மிகச் சிறியனாக நினைக்கும்படி
தளைகளான அவித்தை முதலானவைகள் நூறு கிளைகளாகக் கிளைக்கும். ‘தேவோஹம் - நான் தேவன், மனுஷ்யோகம்
- நான் மனிதன்’ என்கைக்கு அடியான தளை ஆதலின்,
‘சிறுக நினைவது ஓர் பாசம்’
என்கிறார்.
மறுகல் இல் ஈசனைப்
பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை - இந்திரிய நியமனம் முதலானவைகள் உண்டாய், பின்பு
பகவானை வழிபட்டுக் கர்மங்களை எல்லாம் அழித்து, ஆத்துமாவைக் காண வேண்டும் என்று இருக்கின்ற
அன்றும், சர்வேசுவரன் பக்கல் 4அந்திம ஸ்மிருதி பண்ணி
_____________________________________________________
1. ‘சங்கோசம் என்கிறது
என்? முத்தி நிலையில் அனுபவமாகையாலே விபுவாய்
இராதோ?’ என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்.
‘இவ்வருகு’ என்று
தொடங்கி. இவ்வருகு உள்ளன - செல்வம் முதலாயின. ‘அவ்வருகு’ என்றது,
மோக்ஷ உலகத்தை. ‘ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக்,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்
அடைந்தேன் உன் திருவடியே,’ என்பது
இவருடைய திருவாக்கு.
(திருவாய்மொழி,4.9:10)
2. ‘அப்பயன்’ என்றதில்
உள்ள சுட்டு, மேற்பாசுரத்தில் ‘ஆங்கவனை இல்லார்’
என்றதனைச் சுட்டுகிறது. ‘அங்ஙனமாயின், உபாசனை
இல்லையாகில்
என்றன்றோ கூறல் வேண்டும்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘உபாசனமானது’
என்று தொடங்கி. ‘ஆனால், அவனுக்குச் சுகரூபத்தின்
தன்மை உண்டோ?’ என்னும் வினாவிற்கு விடையாக
‘அவனுடைய சாதனம்’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
3. ஆத்தும அநுசந்தானம் பண்ண
ஒண்ணாமை அன்றி, விரோதிகளும் பல
உண்டாகும் என்று அருளிச்செய்கிறார், ‘தன்னை’ என்று தொடங்கி.
‘முன்புத்தையிற்காட்டில்’ என்றது, ‘சுவர்க்கம் முதலான செல்வங்களைப் பற்றி
நின்ற காலத்தைக்காட்டிலும்
‘ என்றபடி.
4. அந்திம
ஸ்மிருதி - உடலை விட்டு உயிர் நீங்குங்காலத்து இறைவனை
நினைக்கும் நினைவு. அந்த மோக்ஷம் -
ஆத்தும அனுபவம்.
|