|
கூ
கூடின சர்வேசுவரனை
விளக்கிப் பேச வந்ததாகையாலே, ‘மூன்று குணங்களையுமுடைய மக்களை விஷயமாக உடையன வேதங்கள்.’
என்கிறபடியே, முக்குணங்களையும் உடையவர்களாய் இருக்கின்ற மக்களை விஷயமாகவுடையதாய் அவர்களுக்கு
நலம் சொல்லப் போந்தது ஆகையாலே, அவர்களுடைய குணங்கட்குத் தகுதியாக நலம் சொல்லுமது உண்டாய்
இருக்கும் வேதத்துக்கும்.
1அது
அங்ஙனம் சொல்லிற்றேயாகிலும், 2‘எல்லா இடங்களிலும் நிறைந்த தண்ணீரில் வேட்கையுடையவனுக்கு
எவ்வளவு நீர் பிரயோஜனப்படுகிறதோ, அறிந்த பிராமணனுக்கு எல்லா வேதங்களிலும் அவ்வளவே பிரயோஜனப்படுகின்றது,’
என்கிறபடியே, ஆறு பெருகி ஓடாநின்றால், நீர் வேட்கையால் வருந்தின ஒருவன் தன்விடாய்
தீருகைக்கு வேண்டுவது எடுத்துக்கொள்வானே அல்லது. ஆற்று நீரை அடங்கலும் வற்றுவிக்க வேண்டும் என்னும்
நிர்ப்பந்தம் இல்லையேயன்றோ அவனுக்கு? அப்படியே, முமுக்ஷூவானவன் இந்த வேதத்தில் தனக்குக்
கொள்ள வேண்டியதான அமிசத்தையன்றோ அறிய வேண்டுவது?
3இனி,
அந்த வேதந்தான் ‘பூர்வபாகம்’ என்றும், ‘உத்தரபாகம்’ என்றும் இரண்டு வழிகளாலே
பிரிவுண்ணக்
_____________________________________________________
1. ‘வேதம் அவர்களுடைய குணங்களுக்குத்
தகுதியாக ஹிதம் சொல்லிப்
போந்ததாகில், அறிவுள்ளவனுக்கு உபாதேயம் யாது?’ என்ன, அதற்கு
விடை
அருளிச்செய்கிறார், ‘அது அங்ஙனம்’ என்று தொடங்கி.
2. ஸ்ரீ கீதை, 2 :
46.
3. ‘இனி, பற்றத்தகுந்ததையும்,
விடத்தக்கவைகளையும் அறுதியிடுவது எது?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இனி, இந்த வேதந்தான்’
என்று
தொடங்கி.
‘ஆதௌ வேதா:
பிரமாணம் ஸ்மிருதி: உபகுருதே ஸேதிஹாஸை: புராணை:
நியாயை: ஸார்த்தம் த்வத் அர்ச்சாவிதிம்
உபரிபரிக்ஷீயதே பூர்வபாக:
ஊர்த்வோபாக: த்வத் ஈகா குண விபவ பரிஜ்ஞாபநை: த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைச் ச ஸர்வை: அஹம் இதி பகவந்! ஸ்வேந ச வியாச கர்த்த
- பகவானே! வேதங்களானவை
முதலிலே (வேறொரு பிராமணத்தை
விரும்பாமல் தாமாகவே) பிரமாணமாகின்றன; மநு முதலான
ஸ்மிருதிகளானவை, இதிகாசங்களோடு கூடின புராணங்களோடும் பூர்வ
உத்தர மீமாம்சைகளோடுங்கூடி (அந்த
வேதங்களுக்குப் பொருள் விவரணம்
செய்தலாகிற) உபகாரத்தைச் செய்கின்றன; (அந்த வேதத்தில்)
கர்ம காண்டம்
எனப்படுகிற பூர்வபாகமானது, தேவரீருடைய திருவாராதன முறைமையைச்
சொல்லும் வகையில்
முடிகின்றது; பிரம காண்டம் எனப்படுகின்ற உபநிடத
பாகமானது, தேவரீருடைய செயல்கள் குணங்கள் விபூதிகள்
ஆகிய இவற்றை
விளங்கத் தெரிவிப்பதனாலே தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்
முடிகின்றது;
‘எல்லா வேதங்களாலும் அறியக்கூடியவன் நானே,’ என்று
தேவரீர் அருளிச் செய்ததும் உண்டேயன்றோ?’
என்பது ஸ்ரீரங்க
ராஜஸ்தவம்.
|