பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
433

1த

1தலையறுப்பாரும் தலையறுப்புண்பாருமாய், கிராமணிகளைப் போலே ஒருவரை ஒருவர் வேரோடே அலம்பிப் போகட வேண்டும்படியான விரோதம் செல்லாநிற்கச் செய்தேயும், ஆபத்து எல்லார்க்கும் ஒத்திருக்கையாலே எல்லாரும் ஒரு மிடறாய் ஏத்தாநிற்பர்கள், ஒருவர்க்கு ஒருவர் விரோதமும் கிடக்கச்செய்தே, ‘ஊராகக் கூடி வந்தது’ என்பார்களே அன்றோ?

    ஆடு புட்கொடி மூர்த்தி - ‘வெற்றிப்புள்ளைக் கொடியாகவுடையவன்; அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும் விஷயத்தில் சர்வேசுவரன் செய்ய வேண்டுவது ஒன்றும் இன்று; திருவடி திருத்தோளிலே சலியாமல் இருக்குமத்தனையே வேண்டுவது,’ என்பார், ‘ஆடுபுள்’ என்கிறார். ஆடுபுள் -வெற்றிப்புள்; ஆடு - வெற்றி. புள் - பறவை. அன்றிக்கே, ‘சர்வேசுவரன் வாஹனம் என்கிற மகிழ்ச்சியின் மிகுதியாலே மதித்து ஆடாநின்ற புள்’ என்றுமாம். 2‘கருடக் கொடியன், கருடவாஹநன்’ என்று சொல்லப்படுமவனாயிற்று மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவன் ஆவான். ஆதி மூர்த்திக்கு - ‘காரணப் பொருளாக உள்ளவனே தியானிப்பதற்கு உரியன்,’ என்கிறபடியே, உலக காரண வஸ்துவேயன்றோ உபாசிக்கத் தக்கதாவது? ஆக, 4‘மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவனுமாய் எல்லாரையும் நியமிக்கின்றவனுமான சர்வேசுவரனுக்கு’ என்றபடி.

_____________________________________________________

1. ‘கூடி’ என்கையாலே, அவர்களுக்குள் பரஸ்பரம் விரோதம் உண்டு
  என்னுமதனையும், அப்படி விரோதம் உண்டாயிருக்கக் கூடுகைக்குக்
  காரணத்தையும் திருஷ்டாந்தத்தோடு அருளிச்செய்கிறார், ‘தலையறுப்பாரும்’
  என்று தொடங்கி. தலையறுப்பார் - சிவன், தலையறுப்புண்பார் - பிரமன்.

2. பின் வருகின்ற ‘அடிமை புகுவதுவே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘ஆடு
  புட்கொடி மூர்த்தி’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘கருடக்கொடியன்’
  என்று தொடங்கி. ‘நிவந்தோங்குயர்கொடிச் சேவலோய்! நின் சேவடி
  தொழாருமுளரோ?’ என்ற பரிபாடற்பகுதியும் இக்கருத்தே பற்றி வந்தது.

3. அதர்வசிகை.

4. ‘ஆடுபுட்கொடி, கூடி வானவர் ஏத்த நின்ற’ என்ற விசேடணங்களாலே
  பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘மோக்ஷத்தைக்
  கொடுக்கக்கூடியவனுமாய்’ என்று தொடங்கி.