|
ஈ
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 1‘நீங்கள் உய்வு பெறுவதற்கு அவ்வளவும் செல்ல வேண்டுமோ? அவன்
தங்கியிருக்கிற திருநகரியை உங்கள் ஞானத்துக்கு விஷயமாக்க அமையும்,’ என்கிறார்.
விளம்பும் ஆறு
சமயமும் - 2சிலவற்றைச் சொல்லா நின்றால், தாங்களும் சில தர்க்கங்களைச்
சொல்லாநிற்பர்களத்தனை போக்கி, பிரமாணத்திற்கு அநுகூலமான தர்க்கம் அல்லாமையாலே கேவலம்
உத்திசாரமேயாயிருக்கிற புறச்சமயங்கள் ஆறும். புறச்சமயங்கள் ஆறாவன: சாக்கிய உலூக்கிய
அக்ஷபாத க்ஷபண கபில பதஞ்சலி மதங்கள். இது பாஷ்யகாரர் அருளிச்செய்தது. மற்றும் அவை ஆகியும்
- மற்றும் அவற்றோடு ஒத்த குத்ருஷ்டிகளும். 3புற மதத்தில் உள்ளவர்களும் குத்ருஷ்டிகளும்
மோக்ஷ பலனைப் பெறாதவர்கள். அவர்கள் தாமத குணமுடையவர்கள் என்று எண்ணப்படுகின்றார்கள்.
தன்பால் அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும் - பிரமாணத்திற்கு மாறுபட்ட
தர்க்கங்களால் ‘இவ்வளவு’ என்று அளவிட்டு அறிய ஒண்ணாதபடி இருக்கிற உலக காரணன் விரும்பித்
தங்கியிருக்கிற; 4தன்னளவில் வந்தால் ‘இல்லை’ என்கைக்கும் ‘இவ்வளவு’ என்று
அளவிட அரிதாய் இருக்கும்; 5‘இல்லை’ என்னும் போதும்,
_____________________________________________________
1. ‘திருக்குருகூரதனை உளம்கொள்
ஞானத்து வைம்மின்,’ என்றதனைக்
கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘அவ்வளவும்’ என்றது,
‘பகவான்
அளவும்’ என்றபடி.
2. ‘விளம்பும்’ என்ற விசேஷணத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார்,
‘சிலவற்றை’ என்று தொடங்கி. ‘சிலவற்றைச் சொல்லா நின்றால்’
என்றது,
‘வேதாந்திகள் பிரமாண அநுகூலமாகச் சில தர்க்கங்களைச் சொல்லாநின்றால்’
என்றபடி.
சாக்கியமதம் - பௌத்த மதம். உலூக்கியமதம் -சார்வாகமதம்.
அக்ஷபாதமதம் - கௌதம மதம்.
க்ஷபணமதம் - ஜைநமதம்.
3. ‘குத்ருஷ்டிகளைப் புறச்சமயங்களோடு
சேர்த்து, ‘அவையாகியும் மற்றும்’
என்று அருளிச்செய்யலாமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘புறமதத்திலுள்ளவர்களும்’ என்று தொடங்கி.
4. ‘தன்னளவில் வந்தால்’
என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
வஸ்துவை ‘இது’ என்று அளவிட்டுப் பின்னேயன்றோ
தூஷிப்பது? அளவிட
முடியாதது ஆகையாலே, அளவிட்டுத் தூஷிக்க முடியாதது என்பது.
5.
‘அவர்கள் இவனை அங்கீகரித்தாலன்றோ அளவிட வேண்டுவது? இவனை
இசையாதார்க்கு அது வேண்டாவே?’
என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இல்லை என்னும் போதும்’ என்று தொடங்கி.
|