பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
442

ஈ

    ஈடு : பத்தாம் பாட்டு. 1‘தன் ஐஸ்வரியத்தில் ஒன்றும் குறையாமல் வந்து திருநகரியிலே நின்றருளுகின்ற பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமை செய்கையே தக்கது,’ என்கிறார்.

    ‘நீள் குடக்கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவது ஆவது,’ என்க. 2‘உறுவதும் இது - சீரியதும் இது; ஆவதும் இது - செய்யத்தக்கதும் இது,’ என்னுதல். அன்றிக்கே, ‘உறுவதாவது இதுவே’ என்னுதல். எத்தேவும் எவ்வுலகங்களும் - எல்லாத் தேவர்களும், தேவர்களுக்கு இன்பத்தை அனுபவிப்பதற்குரிய இடங்களான எல்லா உலகங்களும். மற்றும் - மற்றும் உண்டான உயிர்ப்பொருள்களும் உயிரல்பொருள்களும். தன்பால் மறு இல் மூர்த்தியோடு ஒத்து - தன்னிடத்து வந்தால் 3மறு இல்லாதபடி மூர்த்தியோடு ஒத்து. என்றது, 4இவை மூர்த்தியாமிடத்தில் பிரகிருதி சம்பந்தம் இல்லாத விக்கிரஹத்தைப் போன்று குறைவு இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி. மறு ஆகிறது - குற்றம்; அதாவது, குறைவு; இது இன்றிக்கே இருக்கை. பிரிந்து நிலைத்திருக்கையும் தோன்றுதலும் முதலானவைகள் இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தவாறு.

    அன்றிக்கே, மறுவையுடைத்தான விக்கிரகம் - ஸ்ரீவத்சத்தையுடைத்தான விக்கிரகம்; அதனோடு ஒத்து என்னுதல்; மறு   - ஸ்ரீவத்சம்; இல் - வீடு; இருப்பிடம். அன்றிக்கே, மறு இல்லாத மூர்த்தி உண்டு - குற்றங்கட்கு எதிர்த்தட்டான விக்கிரகம்; அதனோடு ஒத்து’ என்னுதல்;

_____________________________________________________

1. ‘இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே’ என்றதனைக் கடாக்ஷித்துத் ‘தன்
  ஐசுவரியத்தில் ஒன்றும் குறையாமல் வந்து’ என்கிறார். ‘திருக்குருகூரதனுள்’
  என்றது முதல் ‘ஆட்செய்வதே உறுவதாவது’ என்பது முடியக் கடாக்ஷித்துத்
  ‘திருநகரியிலே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. ‘உறுவதாவது’ என்பதனைத் தொடர்மொழியாகவும், ஒரு மொழியாகவும்
  கொண்டு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.

3. ‘மறுவில்லாதபடி மூர்த்தியோடு ஒத்து’ என்றது, ‘அசாதாரண விக்கிரகத்தை
  ஒத்திருக்க’ என்றபடி.

4. ‘இவை’ என்றதனால் ‘எத்தேவும் எவ்வுலகங்களும்’ என்றதனைக் குறிக்கிறார்.