|
வல
வல்லி சேர் நுண்
இடை - 1‘வள்ளி மருங்குல்’ என்றாற்போலே, வள்ளிக்கொடி போலே இருக்கிற
இடையையுடையவர்கள் என்னுதல்; நுண்ணிய இடையையுடைய வல்லி போன்ற வடிவினையுடையவர்கள் என்னுதல்.
இடைக்கு உபமானம் இல்லாமையாலே, ‘நுண்ணிடை’
என்கிறது. ஆய்ச்சியர்தம்மொடும் - திருவாய்ப்பாடியில் இவள் பருவத்தையுடைய பெண்கள் பலரோடும்.
2கொல்லைமை செய்து - வரம்பு அழிந்த செயல்களைச் செய்து. அன்றிக்கே, ‘தன் அழகு
முதலியவைகளாலே அவர்கள் மரியாதையை அழித்து’ என்னலுமாம். குரவை பிணைந்தவர் - அவர்களோடு தன்னைத்
தொடுத்தபடி. இதனால், ‘என் பருவத்தினையுடைய பெண்கள் பலர்க்கும் உதவினவர், அவர்கள் எல்லார்
விடாயையுமுடைய எனக்கு உதவத் தட்டு என்?’ என்னாநின்றாள் என்றபடி.
நல் அடிமேல் அணி
- 4பெண்களும் தானுமாய் மாறி மாறித் துகைத்த திருத்துழாய் பெற வேண்டும் என்று
ஆசைப்படுகிறாள். பிரஹ்மசாரி எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாய் ஆசைப்படுபவள் அன்றே இவள்?
நாறு தூழாய் - 5அவர்களும் அவனுமாகத் துகைத்தது
_____________________________________________________
1. பெரிய திருமொழி,
3. 7 : 1.
2. கொல்லை - வரம்பு அழிந்த
செயல்களைச் செய்பவன்; அல்லது,
செய்பவள், கொல்லைமை - வரம்பு அழிந்த செயல்களைச் செய்கின்றவனது
தன்மை.
3. குரவை என்பது, எழுவரேனும்
எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கை
கோத்தாடுங்கூத்து; இது வரிக்கூத்தின் ஓர் உறுப்பு; விநோதக்
கூத்து
ஆறனுள் ஒன்று.
‘குரவை என்பது கூறுங் காலைச்,
செய்தோர் செய்த காமமும் விறலும்,
எய்த உரைக்கு மியல்பிற்றென்ப,’ எனவும், ‘குரவை என்பது
எழுவர்
மங்கையர், செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்து, அந்நிலைக்கொப்ப
நின்று ஆடலாகும்’
எனவும் சொன்னாராகலின்’ என்பது அடியார்க்கு
நல்லார் உரை.
4. ‘குரவை பிணைந்தவர் நல்லடி
நாறுதுழாய்’ என்றதனால், ‘பெண்களும்
தானுமாய்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். இதற்கு பாவம்
‘பிரஹ்மசாரி’ என்று தொடங்கும் வாக்கியம்.
5. ‘அவர்களும்
அவனும் துகைத்தது என்று அறியும்படி என்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘அவர்களும்
அவனுமாக’ என்று தொடங்கி.
|