இர
இராப் பகல் - எல்லாக்காலமும்.
என்செய்கேன் - இவளைத் தொடங்கினதைச் சொல்லித் தலைக்கட்டப் பண்ணவோ? 1பெண்மையைப்
பார்த்து மீளும்படி பண்ணவோ? என் செய்கோ?
(9)
353
என்செய்கேன்? என்னுடைப்
பேதை,என் கோமளம்,
என்சொல்லும் என்வச
மும்அல்லள்; நங்கைமீர்!
மின்செய்பூண்
மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய்பூண் மென்முலைக்கு
என்று மெலியுமே.
பொ-ரை :
நங்கைமீர்! என்னுடைய பேதை, என்னுடைய கோமளம் என் சொல்லிலும் வருகின்றிலள்; என் வசமும்
வருகின்றிலள்; என் செய்வேன்? பிரகாசத்தைச் செய்கின்ற ஆபரணங்கள் பொருந்திய மார்பையுடையவனான
கண்ணபிரானுடைய திருவடிகளில் அணிந்த திருத்துழாய், பொன்னாற்செய்த ஆபரணங்களையுடைய மெல்லிய
முலைகளுக்கு அலங்காரமாக வேண்டும் என்று மெலியா நின்றாள்.
வி-கு :
‘கோமளம் கண்ணன் கழல் துழாய் மென்முலைக்கு என்று மெலியும்; என் சொல்லும் என் வசமும் அல்லள்;
என்செய்கேன்?’ எனக்கூட்டுக.
ஈடு :
பத்தாம் பாட்டு. 2‘உன்மகள் நீ இட்ட வழக்கு அன்றோ? அவளுக்கு நலத்தைச்
சொல்லி மீட்கத் தட்டு என்
_____________________________________________________
1. ‘பெண்மையைப் பார்த்து’
என்றது, ‘இலங்கையை அழித்து என்னை
அழைத்துக்கொண்டு செல்லுதல் அந்த இராமபிரானுக்குத் தக்கது,’
என்றிருக்க வேண்டும்படியான பெண்மையைக் குறித்தபடி. ‘என் செய்கேன்’
என்றது, ‘சொரூபத்தைப்
பார்த்து இவள் வாய் மூடும்படி பண்ணவோ?
அசாதாரணச் சின்னங்களைச் சொல்லித் தலைக்கட்டும்படி
பலத்தை
உண்டாக்கவோ? அவைதம்மை இப்போது அண்மையிலே இருக்கத்
தக்கவைகளாகச் செய்யவோ? ஒன்றும்
செய்ய முடியாதே! என் செய்வேன்?’
என்கிறாள் என்றபடி.
‘நீரும் ஓர் பெண் பெற்று
நல்கினீர்’ என்றதனால், இவ்வாழ்வாருடைய
பிரேம தசைக்கு மற்றைய ஆழ்வார்களுடைய பிரேமதசை ஒவ்வாது
என்பது
பெறப்படும்.
2. ‘என்
சொல்லும் என் வசமும் அல்லள்,’ என்கையாலே கிடைத்த சங்கையை
அநுவதித்து, ‘என்று மெலியும்’
என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|