|
New Page 1
பொ-ரை :
ஈசனும் உலகத்தை எல்லாம் உண்டு உமிழ்ந்த என் தந்தையுமான ஏகமூர்த்திக்குப் பூசுகின்ற சந்தனம்
எனது நெஞ்சமே ஆகும்; சார்த்துகின்ற மாலையும் என்னுடைய சொற்களாலே தொடுக்கப்பட்ட மாலையே
ஆகும்; உயர்ந்த பொன்னாடையும் அந்த வாசகம் செய் மாலையே ஆகும்; ஒளி பொருந்திய அணியப்படுகின்ற
ஆபரணங்களும் என் கைகளால் கூப்பித் தொழுகின்ற வணக்கமே ஆகும்.
வி-கு :
வாசகம் - சொற்கள். வாசகம் செய் மாலை - திருவாய்மொழி முதலான பிரபந்தங்கள். ஏகமூர்த்தி
- தன்னை ஒத்த இரண்டாவது ஒரு பொருள் இல்லாதபடியான விக்கிரஹத்தையுடையவன். ‘ஏக மூர்த்திக்குச்
சாந்து நெஞ்சமே; கண்ணி வாசகம் செய் மாலையே; பட்டாடையும் அஃதே; கலனும் கைகூப்புச் செய்கையே
ஆம்,’ என்க.
ஈடு :
இரண்டாம் பாட்டு. 1‘என்னுடைய உறுப்புகளின் காரியங்களான நினைவு முதலானவைகளே எல்லாவற்றாலும்
நிறைவுற்று விளங்கும் இறைவனுக்கு இன்பப் பொருள்கள் எல்லாம் ஆயின,’ என்கிறார்.
பூசும் சாந்து என்
நெஞ்சமே - சர்வேசுவரனுடைய திருமேனியின் வேறுபட்ட சிறப்பினையும், அவனுக்குத் தம் பக்கல் உண்டான
விருப்பத்தையும் நினைத்துப் பின்னாடி மீளவும் சொல்லுகிறார், ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’
என்று. புனையும் கண்ணி - 2வழக்கனான மாலை, அன்றிக்கே, சார்த்தப்படும் மாலை.
என்னுடைய வாசகம் செய்மாலை - 3இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டா; இவர் உண்மையாகில்
அவனுக்கேயாய் இருக்கும்; ஆதலின், ‘எனதுடைய’ என்கிறார். 4இவர் நெஞ்சினைக்
_____________________________________________________
1. ‘வாசகஞ்செய் மாலை.
என் கைகூப்புச் செய்கை,’ என்று, உறுப்புகளினுடைய
காரியங்களைச் சொன்னதற்குச் சேர, ‘நெஞ்சம்’
என்றதனை நினைவு
பரமாக்கி அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘என்னுடைய’ என்று தொடங்கி.
2. வழக்கனான - செலவுக்கு
யோக்கியமான.
3. ‘‘என்னுடைய’ என்று
மமகாரம் படச்சொல்லலாமோ?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘இவர் அவனுக்கு’ என்று
தொடங்கி. ‘யானே நீ;
என்னுடைமையும் நீயே,’ என்றிருக்குமவராகையாலே, இவர் உடைமையாகில்
அவனுக்கேயாயிருக்குமாதலின், மமகாரம் இன்று என்றபடி.
4, ‘வாசகம்’
என்பதற்கு, மலர்கள் என்று பொருள்கொண்டு, அவற்றால்
செய்யப்பட்ட மாலை என்று திருவுள்ளம் பற்றி,
அதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘இவர்’ என்று தொடங்கி.
|