|
இ
இவை அடையத் தன் பக்கலிலே
கிடக்கத் தான் ஒருவனுமேயாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது. ஆக, ‘படைப்புக்கு முன்னே
இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி. இரு மூர்த்தி - பிரகிருதியும் மஹானும் ஆகிய இரண்டையும்
நோக்கிக்கொண்டு அவற்றைத் திருமேனியாகக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது; என்றது,
1‘காரிய காரணங்கள் இரண்டையும் தனக்குத் திருமேனியாகவுடையனாய் இருக்கும் இருப்பைச்
சொல்லுகிறது,’ என்றபடி. 2இரண்டுக்கும் உண்டான அண்மையைப் பற்றச் சொல்லுகிறது.
அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான நிலையன்றோ மஹானாகிறது? மூன்று மூர்த்தி - மூன்று விதமான
அகங்காரங்களைச் சரீரமாகக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. சாத்விகமாயும் இராஜசமாயும்
தாமசமாயும் மூன்று வகைப்பட்டே அன்றோ அகங்காரந்தான் இருப்பது? பல மூர்த்தியாகி ஐந்து பூதமாய்
- 3மேலே கூறிய முறை அன்று இங்குச்
____________________________________________________
1. ‘காரிய காரணங்கள்
இரண்டையும்’ என்றது, மஹானாகிய காரியத்தையும்
மூலப்பகுதியாகிய காரணத்தையும் குறித்தபடி.
2. ‘அகங்காரம் முதலான
தத்துவங்களும் மூலப்பகுதியின் காரியமாயிருக்க,
‘மஹத்’ என்னும் தத்துவத்தை மாத்திரம்
சொல்லுவான் என்?’ என்னும்
வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இரண்டுக்கும் உண்டான’ என்று
தொடங்கி. ‘அண்மை எப்படி?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அவ்யக்தம்’ என்று தொடங்கி.
‘அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான
நிலை’ என்றது, அவ்யக்தமாவது, பிரகிருதியினுடைய நிலை
வேறுபாடுகளுள்
ஒன்று; பிரகிருதியானது. ‘அவிபக்த தமஸ்’ என்றும், ‘விபக்த தமஸ்’ என்றும்,
‘அக்ஷரம்’ என்றும், ‘அவ்யக்தம்’ என்றும் நான்கு வகையாக இருக்கும்;
அவற்றுள் ஒன்றான அவ்யக்தத்தினுடைய
காரியநிலை மகானாய் இருத்தலால்
என்றபடி, ‘அவிபக்த தமஸ்’ என்பது, பூமியில் விதைக்கப்பட்ட
விதை
போன்றது. ‘விபக்த தமஸ்’ என்பது, பூமியிலிருந்து எழும் விதை போன்றது.
‘அக்ஷரம்’ என்பது,
நீருடன் கலந்து நனைந்து பிரிந்த உறுப்புகளையுடைய
விதைபோன்றது. ‘அவ்யக்தம்’ என்பது, ஊறிப்
பருத்து மேலெழுந்து வெடித்த
விதை போன்றது. ‘மகத்’ என்பது, வித்தினின்றும் எழுந்த முளை
போன்றது.
3. ‘மேலே கூறிய முறையன்று இங்குச் சொல்லுகிறது’ என்றது, ‘ஏகமூர்த்தி
இருமூர்த்தி மூன்று மூர்த்தி’ என்ற
இடங்களில் காரணகாரியங்கள் என்ற
முறை பற்றி அருளிச்செய்தார்; ‘இனி, அருளிச்செய்வது அம்முறையில்
அன்று,’ என்றபடி. அதனை விளக்குகிறார், ‘சாத்விக அகங்காரம்’ என்று
தொடங்கி. பதினோர் இந்திரியங்கள்
ஆவன, ஞானேந்திரியங்கள் ஐந்து,
கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று. இங்குக் கூறிய தத்துவங்களின்
முறையையும் விரிவையும் பரம காருணிகரான ஸ்ரீமத் பிள்ளை லோகாசார்யர்
அருளிச்செய்த தத்துவத்திரயத்தில்
அசித் பிரகரணத்தாலும், பாகவதத்தில்
சுகமுனி தத்துவமுரைத்த அத்தியாயத்தாலும் தெளிவாக உணரலாகும்,
‘சுவை
ஒளி யூறோசை’ என்ற திருக்குறளின் விசேடவுரையிலும் இதனைச்
சுருக்கமாகக் காணலாகும்.
|