|
பூத
பூத்தண் மாலை
கொண்டுஉன்னைப்
போதால்
வணங்கே னேலும்,நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப்
புனையும் கண்ணி
எனதுயிரே.
பொ-ரை :
அழிப்பதற்கு நினைத்து உனது திருவாயிலே முலையை வைத்துப் பாலைக் கொடுத்த வஞ்சனை பொருந்திய பேய்
மகளாகிய பூதனையினது உயிரை நீக்கிய ஆச்சரியமான செயல்களையுடைய ஆயனே! வாமனனே! திருமகள்
கணவனே! குளிர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைக்கொண்டு உன்னை அவ்வக்காலத்தில் வணங்கிலேனேயாகிலும்,
உனது குளிர்ந்த அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட திருமுடிக்கு அணிகின்ற மாலை என்னுடைய
உயிரேயாம்.
வி-கு :
‘எண்ணித் தந்த பேய்’ என்க. ‘ஆய மாயனே’ என்பதனை ‘மாய ஆயனே’ எனப் பிரித்துக் கூட்டுக.
ஆயன் - கிருஷ்ணன்.
ஈடு :
நாலாம் பாட்டு. 1‘பூதனை முதலானோரை அழிக்கின்ற காலத்தில் சிரமம் தீரக்
குளிர்ந்த உபசாரங்களைச் செய்யப்பெற்றிலேனேயாகிலும், குளிர்ந்த உபசாரத்தால் அல்லது செல்லாத
உன்னுடைய மிருதுத்தன்மையையுடைய திருமேனிக்குச் சார்த்தும் மாலை என் உயிரேயாய்விடுவதே!’ என்கிறார்.
மாய்த்தல் எண்ணி
- 2‘இன்னாரை மாய்த்தல் எண்ணி என்னாமையாலே உலகத்தையே அழிப்பதற்காக அன்றோ
அவள் கோலி வந்தது?’ என்பதனைத் தெரிவிக்கிறார். 3‘சரீரியை நலிந்தால்
சரீரம் தன்னடையே அழிந்துவிடும். அன்றோ? உயிரிலே நலிந்தால் உறுப்புகள்தோறும் தனித்து நலிய
வேண்டாவே அன்றோ? 4உலகங்கட்கெல்லாம்
_____________________________________________________
1. ‘போதால் வணங்கேனேலும், புனையும் கண்ணி எனது உயிரே’
என்றதனைக்
கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘முதலானோரை’ என்றதனால்
மகாபலியைக்
கொள்க.
2. ‘ஸ்ரீகிருஷ்ணனை’ என்னாமல்,
பொதுவாக ‘மாய்த்தல் எண்ணி’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘இன்னாரை’ என்று தொடங்கி.
3. ‘கிருஷ்ணனை நலிந்தால்,
அது உலகத்தையே அழிப்பதாக முடியுமோ?’
என்ன, அதற்கு இரண்டு வகையாக விடை அருளிச்செய்கிறார்,
‘சரீரியை’
என்று தொடங்கி இரண்டு வாக்கியங்களாலே. சரீரி - உயிர்.
4. ‘ஸ்ரீ
கிருஷ்ணன் உலகத்திற்கெல்லாம் உயிரோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘உலகங்கட்கெல்லாம்’
என்று தொடங்கி. திருவாய்.8,1:5.
|