|
New Page 2
யுடைய ஆயனே! 1இவனும்
பிள்ளையாயே முலையுண்டான்; அவளும் தாயாய் முலை கொடுத்தாள்; பொருளின் தன்மையாலே முடிந்தாள்
இத்தனை.
வாமனனே - 2‘வெங்கொங்கை
உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான், தன்கொங்கை வாய்வாய்த்தாள் சார்ந்து’ என்றும்,
3‘பேய்ச்சிபால் உண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து, ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே’
என்றும் சொல்லப்படுகின்றபடியே அந்த அவதாரத்தில் பூதனை முலை கொடுத்தால் அதனை மாற்றுவதற்கு
உரிய மருந்தாக முலை கொடுக்கைக்கு ஒரு தாயாகிலும் உண்டே அன்றோ அங்கு? அதுவும் இன்றிக்கே,
4இவனைப் பெற்றிட்டு வைத்துத் தாயும் தமப்பனும் தவத்திலே கருத்து ஊன்றினவர்களாய்
இருந்துவிட, அசுரத்தன்மை வாய்ந்தவர்கள் இருந்த இடத்தே தானே போய்க்கிட்டும்படியாய் அன்றோ
இருந்தது? என்றது, ‘தான் இருந்த இடத்தே அவர்கள் வந்து கிட்டினாற்போலே அன்றோ எதிரிகள்
இருந்த இடத்தே தான் சென்று கிட்டுமது? அது, மிகவும் வயிறு எரித்தலுக்குக் காரணமாய் இருக்குமே
அன்றோ?’ என்றபடி. 5அதனையே அன்றோ, ‘சீராற் பிறந்து சிறப்பால்
_____________________________________________________
1. ‘ஆயனாயிருக்கவும், ஆச்சரியமான
ஆற்றல் யாது?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இவனும் பிள்ளையாயே’ என்று தொடங்கி.
2. ‘வாமனனே! என்றது, அதிலும்
இது பரிய வேண்டுகையாலே என்று கூறத்
திருவுள்ளம் பற்றிப் பரிய வேண்டுகைக்குக் காரணமும் காட்டுகிறார்,
‘வெங்கொங்கை’ என்று தொடங்கி. இது, மூன்றாந்திருவந். 74.
3. மூன்றாந்திருவந்.
29.
4. இவனை - வாமனனை.
‘தாயும் தமப்பனும்’ என்றது, அதிதியையும் காசிப
முனிவரையும்.
‘காலநு னித்துஉணர்
காசிபன் என்னும்
வாலறி வற்குஅதி
திக்குஒரு மகவாய்
நீலநி றத்துநெ டுந்தகை
வந்தோர்
ஆலமர் வித்தின்
அருங்குறள் ஆனான்.’
என்றார் கம்பநாட்டாழ்வார்.
5. ‘அப்படி வயிறு எரிந்தார்
உண்டோ?’ என்ன, ‘அதனையே யன்றோ’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘அதனையேயன்றோ?’
என்றது, ‘அதனை நினைத்தேயன்றோ?’ என்றபடி. ‘சீராற்பிறந்து’ என்று
தொடங்கும்
பாசுரம், பெரிய திருவந். 16.
|