|
அவன
அவன் அணிந்துகொள்ளுகின்ற
மாலையாய் இராநின்றது; அவன் தரித்திருக்கின்ற பொன் மயமான ஒளி பொருந்திய திருமுடி முதலான
எண் இல்லாத பல வகையான ஆபரணங்களும் என்னுடைய அன்பேயாய் இராநின்றது; பொருந்திய பீதாம்பரமும்
அந்த அன்பேயாகும்; மூவுலகத்தாரும் பொருந்திச் சொல்லுகின்ற கீர்த்தியும் அந்த அன்பேயாகும்.
வி-கு :
‘எனது உயிர் கண்ணி; காதல் கனகச் சோதி முடி முதலா எண் இல் பல் கலன்களும் அஃதே; ஏலும்
ஆடையும் அஃதே; கீர்த்தியும் அஃதே’ என்க. கண்ணி - மாலை. கண்ணி என்பதற்குத் ‘தலையில் அணியும்
மாலை’ என்பர் புறநானூற்று உரையாசிரியர். கலன் - ஆபரணம்.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1தம்முடைய அன்பு முதலானவைகள் ஓர் ஒன்றே ஆபரணங்கள் முதலான எல்லாப்
பரிச்சதங்களும் ஆயிற்று அவனுக்கு என்கிறார்.
எனது உயிர் கண்ணி
- 2‘நான் ‘என்னது’ என்று இருக்கிறதை அன்றோ அவன் தனக்கு மாலையாகக் கொண்டது?’
என்பார், ‘எனது உயிர் கண்ணி’ என்கிறார். அன்றிக்கே, 3‘மார்வத்து
மாலை’ என்கிறவளைத் தனக்கு மாலையாகக் கொள்ளுகை தக்கது; அஃது ஒழிய என் உயிரை அன்றோ தனக்கு
மாலையாகக் கொண்டான்?’ என்பார், ‘கண்ணி எனது உயிர்’ என்கிறார் என்னலுமாம்.
கனகம் சோதி முடி முதலா எண் இல் பல் கலன்களும் காதல் - விரும்பத் தக்கதாய் ஆதி ராஜ்ய
சூசகமான திருமுடி முதலான எண் இறந்து பல வகைப்பட்ட திரு ஆபரணங்களும் என்னுடைய அன்பேயாம்.
‘இவருடைய காதல் அவனுக்கு ஆபரணமாவது ஏன்?’ என்னில், இவருடைய அன்பிற்குத் தான் விஷயமாகப் பெற்ற
இதனையே, தனக்குப் பல ஆபரணங்கள் சார்த்தினால் பிறக்கும் புகர் உண்டாக அவன் நினைத்திருக்கையாலே,
அதனை நோக்கிச் சொல்லுகிறார். ஏலும் ஆடையும் அஃதே - திரு அரைக்குத் தகுதியான திருப்பீதாம்பரமும்
அந்த அன்பேயாம்.
_____________________________________________________
1. ‘அன்பு முதலானவைகள்’
என்றதனாலே, உயிரையுங்கொள்க. ‘ஆபரணங்கள்
முதலான’ என்றதனால், பீதாம்பரத்தையுங்கொள்க.
பரிச்சதம் - உபகரணம்;
அங்கமாயிருப்பது.
2. ‘நான் என்னது என்றிருக்கிறதை’
என்றது, மயர்வற மதி நலம் அருளுவதற்கு
முன்பிருந்த நிலையைக் குறித்தபடி.
3. திருவாய்மொழி,
10. 10 : 2.
|