பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
96

    ஈடு : ஆறாம் பாட்டு. 1‘இப்படிக் காதலை உடையையாய் இருந்துள்ள நீ என்னைக் கிட்டாதே ஒழிந்தாயேயாகிலும், உன் திருவடிகளே எனக்குத் தாரகம் முதலானவைகள்,’ என்கிறார். ‘உனக்கு நான் உதவப்பெற்றிலேனாகிலும், என் உயிர் முதலானவைகள் உனக்குத் தாரகம் முதலானவைகள் ஆனாற்போலே, நீ வாராயாகிலும் உன் திருவடிகள் எனக்குத் தாரகம் முதலானவைகள்,’ என்கிறார். ‘அவனுடைய காதலைச் சொல்லாநிற்க, நடுவே தம்முடைய காதலைச் சொல்லுவான் என்?’ என்னில், இருவர் கூடிக் கலவாநின்றால் பிறக்கும் ரசங்களும் இருவருக்கும் உண்டாய் இருக்குமேயன்றோ? அவற்றுள், மேல் எல்லாம் அவனுடைய காதலைச் சொல்லிக் கொண்டு போந்தார்; இப்போது அவனுடைய காதலின் மிகுதி தம்மையும் காதலன் ஆக்கிற்று என்கைக்காகத் தம்முடைய காதலைச் சொல்லுகிறார்.

    கால சக்கரத்தொடு வெண்சங்கம் கை ஏந்தினாய் - 2இவர் கூப்பிட்ட பாசுரந்தான் இதுவாயிற்று. பகைவர்களுக்குக் கூற்றுவனான திருவாழியோடேகூட, நீலநிறம் பொருந்திய திருமேனிக்குப் பரபாகமான வெண்மையையுடைத்தான ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை, வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியிருக்கிற அழகிய திருக்கையிலே பூ ஏந்தினாற்போலே ஏந்தினவனே! ஸ்ரீ பாஞ்சஜன்யத்துக்கு வெளுப்புத் தன்மை ஆனாற்போலே, திருவாழிக்குப் பகைவர்களை அழித்தலும் தன்மையாய் இருக்குமாதலின், ‘காலசக்கரம்’ என்கிறார், ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த - பிரளய ஆபத்திலே வரையாமல் திருவயிற்றிலே வைத்துக் காத்து, அப்பிரளயம் கழிந்தவாறே வெளிநாடு காணப் புறப்படவிட்டு, இப்படி 3வரையாமல்

_____________________________________________________

1. மேற்பாசுரங்களிற்சொன்ன காதலை அநுவதித்துக்கொண்டு ‘வாராயாகிலும்
  கோலமாம் என் சென்னிக்கு’ என்றதனாற்போந்த பொருளை
  அருளிச்செய்கிறார், ‘இப்படி’ என்று தொடங்கி. கூறிய பொருளைத்
  திருஷ்டாந்தத்தோடு அருளிச்செய்கிறார், ‘உனக்கு’ என்று தொடங்கி.

2. ‘இவர் கூப்பிட்ட பாசுரந்தான் இதுவாயிற்று’ என்றது, இப்பாசுரத்தில் ‘நான்
  அழைத்தால்’ என்னுமளவுக்கு பாவம்.

      பரபாகம் - பல நிறங்கள் கலத்தலால் உண்டாகும் சோபை.

3. ‘முற்றும்’ என்றதன் பொருள், ‘வரையாமல்’ என்பது. வரையாமல் -
  வரம்பிடாமல்.