|
New Page 1
பொ-ரை :
ஒலிக்கின்ற திருவடிகளை நீட்டி உலகத்தை அளந்து கொண்ட அழகிய வாமனனே! ஒலிக்கின்ற திருவடிகளில்
கைகூப்பி வணங்குகின்றவர்கள் அடையும்படி நின்ற மாயவனே! வாசனை பொருந்திய பூக்களையும் தண்ணீரையும்
கொண்டு துதிக்கமாட்டேனேயாகிலும், வேதங்களால் புகழப்படுகின்ற உன்னுடைய சோதி மயமான திருமேனியானது
என்னுடைய உயிரின் மேலதேயாம்.
வி-கு :
‘நீட்டிக்கொண்ட வாமனா! என்க. ‘ஏத்தமாட்டேனேலும், உன் திருவுருவம் என்னது ஆவி மேலது,’ என்க.
விரை - வாசனை. ‘விரை’ என்னும் அடையை நீருக்கும் கூட்டுக. இப்பாசுரத்தில் முதல் அடியாலே, சேஷித்வ
பிரதானமான பிரணவார்த்தமும், ‘குரைகழல்கள் கைகூப்புவார்கள்’ என்றதனால், நமஸ் சப்தார்த்தமும்,
‘கூடநின்ற மாயனே’ என்றதனால், நாராயண சப்தார்த்தமும் சொல்லுகிறது என்பர் பெரியோர்.
ஈடு :
ஏழாம் பாட்டு. 1‘மேலே கூறிய அன்பும் அதற்குத் தகுதியான செயல்களும் இன்றிக்கே
இருக்கிலும் என் உயிரே உனக்கு ஜீவனத்திற்கு ஏது ஆவதே!’ என்கிறார்.
குரை கழல்கள் நீட்டி
- 2‘மண் முழுதும் அகப்படுத்து நின்ற’ என்கிறபடியே, பூமிப்பரப்பு அடையத் திருவடிக்குள்ளேயாம்படி
திருவடியை நிமிர்த்து. குரை - பரப்பு என்னுதல்; ஓசை என்னுதல். மண் கொண்ட கோலவாமனா -
3மண் கொண்ட பின்பும் வாமன வேஷம் இவர் திருவுள்ளத்திலே ஊற்றிருந்தபடி. இந்திரனுக்கு
இராச்சியம் கொடுக்கை அன்றிக்கே, தம்மை அனுபவிப்பிக்கைக்காக அவ்வடிவு கொண்டான் என்று
இருக்கிறார். இதனால்,
_____________________________________________________
1. மேற்பாசுரத்தில்
‘ஓலமிட்டு நான் அழைத்தால்’ என்றதனைக் கடாக்ஷித்து,
‘மேலே கூறிய அன்பும்’ என்கிறார். இப்பாசுரத்தின்
மூன்றாம் அடியைத்
திருவுள்ளம் பற்றி, ‘அதற்குத் தகுதியான செயல்களும்’ என்கிறார்.
2. திருநெடுந்தாண்டகம்,
5.
3.
‘திரிவிக்கிரமனாயன்றோ பூமி அளந்தது? ‘வாமனன்’ என்கிறது என்?’
என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘மண் கொண்ட பின்பும்’ என்று
தொடங்கி.
|