பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
1

ஸ்ரீ

ஐந்தாம் பத்து

முதல் திருவாய்மொழி - “கையார் சக்கரம்”

முன்னுரை

    ஈடு : 1முதற்பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்; இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்; மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவத சேஷத்துவ பர்யந்தமான பகவத் கைங்கரியம் என்றார்; நான்காம்பத்தால், இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐச்வர்ய கைவல்யங்கள் என்றார்; அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்கிறார் இவ்வைந்தாம் பத்தால்.

    2
“நண்ணாதார் முறுவலிப்ப” என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் படுகிற துக்கத்தை அநுசந்தித்து, அதற்குப் பரிஹாரமாகப் ‘பகவானுடைய பரத்துவ ஞானத்தை உண்டாக்குவோம்’ என்று பகவானுடைய பரத்துவத்தை உபதேசித்தார் மேல் திருவாய்மொழியிலே; இரண்டு கிட்டம் தம்மிலே சேரக் கிடக்க அவற்றிலே

_________________________________________________

1. முதல் ஐந்து பத்துக்களுக்கும் பொருள் இயைபு அருளிச்செய்கிறார்
  ‘முதற்பத்தால்’ என்று தொடங்கி.

2. மேல் திருவாய்மொழிக்கும், இத்திருவாய்மொழிக்கும் பொருள் இயைபு
  அருளிச்செய்கிறார் ‘நண்ணாதார்’ என்றது முதல் ‘என்கிறார்
  இத்திருவாய்மொழியில்’ என்றது முடிய. கிட்டம்-உலோகத்துண்டு.