|
ஈ
ஈடு :-
மூன்றாம் பாட்டு. 1“என் செய்யும் ஊரவர் கவ்வை”
என்றாள்; ‘எல்லாம் செய்தாலும் பழி நீக்க வேண்டாவோ’ என்று இருப்பாளே அன்றோ இவள்;
2‘இது பழி’ என்று நீக்க ஒண்ணாதபடி எனக்கு ஈடுபாட்டினை விளைத்தவன் எவ்வளவிலே நிற்பவன்,
3‘இது பழி’ என்று மீளாதபடி இவ்விஷயத்தில் ஈடுபட்டவளாய் இருக்கிற நான் எவ்வளவிலே
நிற்கிறேன், 4‘இது பழி’ என்று சொல்லுகிறவர்கள்தாம் எவ்வளவிலே நிற்கிறார்கள்,
5அவர்கள் சொல்லுகிறவற்றைச் சொல்லுகிற நீதான் எவ்வளவிலே நிற்கிறாய் என்கிறாள்.
ஊர்ந்த சகடம்
உதைத்த பாதத்தன்-ஊருகிற சகடம் அன்று; அது செய்வது எல்லாம் செய்து முடிந்தது; இவன்
______________________________________________________
1. மேற்பாசுரத்திலே, பழியை
நீக்குவதற்குரிய காலம் கடந்தது என்று
சொல்லியிருக்க, இப்பாசுரத்திலே மீளவும் “ஊரவர் கவ்வை
என் செய்யும்”
என்கிறதற்கும், மடல் ஊருகிற சமயத்திலே பழி சொல்ல வேண்டியிருக்க,
அவன் செய்த
உபகாரம் முதலானவற்றைச் சொல்லுகிறதற்கும் தகுதியாக
அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘என் செய்யும்
ஊரவர் கவ்வை’ என்று
தொடங்கி. மேற்பாசுரத்தில் “ஊரவர் கவ்வை என் செய்யும்” என்றவள்,
இப்பாசுரத்திலும்
“ஊரவர் கவ்வை என் செய்யும்” என்பான் என்? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘எல்லாம் செய்தாலும்’ என்று தொடங்கி.
எல்லாம் செய்தாலும் - எத்துணை ஆற்றாமை உண்டானாலும்.
‘இவள்’
என்றது’ தோழியை.
2. பழிக்கிற சமயத்திலே
உபகாரங்களைச் சொல்லுதல், மிக்க ஈடுபாட்டினை
உண்டாக்குவதற்குக் காரணங்கள் என்கிறார் ‘இது
பழி’ என்று தொடங்கி.
“ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்” என்பது போன்றவைகளைத்
திருவுள்ளம்பற்றி
‘ஈடுபாட்டினை விளைத்தவன் எவ்வளவிலே நிற்பவன்’
என்கிறார்.
3. “பேர்ந்தும் பெயர்ந்தும்
அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்”
என்றதனை நோக்கி ‘இது பழி என்று’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.
‘எவ்வளவிலே நிற்கிறேன்’ என்றது, ஊரார் பழி புகழாம் எல்லையிலே
நிற்கிற
என் நிலை யாது? என்றபடி.
4. “ஊரவர்” என்றதனை நோக்கி,
‘இது பழி’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். ‘எவ்வளவிலே நிற்கிறார்கள்’ என்றது, பகவத்
விஷயத்தில்
இறங்குதலையே ‘தோஷம்’ என்று சொல்லுகிறவர்கள் நிற்கிற நிலை யாது
என்றபடி.
5. “தீர்ந்த என் தோழி”
என்றதனை நோக்கி, ‘அவர்கள் சொல்லுகிற’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார். ‘நீதான் எவ்வளவிலே
நிற்கிறாய்’ என்றது,
சமானமான சுக துக்கங்களையுடைய உன் நிலை யாது? என்றபடி.
|