பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
110

மாருடனே சுகமாக அருப்பாய்” என்கிற அவர்கள் படியாய் இருந்தாயே நீ என்கிறாள் என்றபடி. 1“நான் அங்கு ஸ்ரீ ராமபிரானுடைய திருமாளிகையில் பன்னிரண்டு வருடங்கள் முடிய, மனிதர்களுக்குரிய போகங்களை அநுபவித்துக்கொண்டு எல்லா விருப்பமும் முற்றுப்பெற்றவளாய் இருந்தேன்” என்கிறதும் உன்னோடே சொல்லக்கூடியதாய் இருந்தது. 2அத் தோழி தானும், பிறர் கூறுகின்ற நல்வார்த்தைகளும் இவள் செவியிற்படும்படியோ இவள்தான் நின்ற நிலை’ என்று அறிகைக்காகச் சொன்னாளித்தனை அன்றோ. ஊரார் பழிக்கு அஞ்சி அன்றோ நான் விலக்குகிறது என்ன, 3என் செய்யும் ஊரவர் கவ்வையே. 4ஆகில், உனக்கு வார்த்தை சொல்ல அடுப்பது இப்படியே காண், ‘நாட்டார் பழி சொல்லுவர்கள்’ என்று சொல்லாமல் ‘என் நினைவு இருந்தபடி இது’ என்று செல்லலாவதுண்டாகில் சொல்லிக்காணாய் என்

____________________________________________________

என்று தொடங்கி. என்றது, பெருமாள், ‘தோழிமாரோடே இரு’ என்று அருளிச்செய்த தோழிமாரைப் போலே இருந்தாய் நீ என்றபடி. அவர்கள்படி - தோழிமார்படி.

1. “சம்அபிபாஷிதும்” என்றதிலேயுள்ள “சம், அபி” என்ற உப சர்க்கத்திற்குப்
  பொருள் அருளிச்செய்கிறார் “நான் அங்கு” என்று தொடங்கி. என்கிறதும் -
  என்கிற இரஹசியமும். உன்னோடே - திருவடியோடே.

  “சமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
   புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் சர்வகாம சம்ருத்திநீ”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 17.

2. “தீர்ந்த என்தோழி” என்னும்படியான இவள், ‘பழிக்கு அஞ்ச வேண்டும்’
  என்பான் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அத்தோழி
  தானும்’ என்று தொடங்கி.

3. “தீர்ந்த என் தோழி” என்று இவள் இப்படிக் கொண்டாடினவாறே,
  ‘என்னைக் கொண்டாடுவதனால் காரியம் என்? ஊரார் பழி
  சொல்லுகிறார்களே’ என்று இவ்வளவும் அவதாரிகையாகக் கொண்டு, அவள்
  சொன்னதற்கு விடை அருளிச்செய்கிறார் “என்செய்யும் ஊரவர் கவ்வையே”
  என்று.

4. “ஊரவர் கவ்வை என்செய்யும்” என்கையாலே, பலித்த பொருளை
  அருளிச்செய்கிறார் ‘ஆகில், உனக்கு’ என்று தொடங்கி. ‘ஊரார் பழிகொண்டு
  காரியம் என்?’ என்பது, “ஊரவர் கவ்வை என்செய்யும்?” என்பதன் பொருள்.