|
என
என்னை வலியுள் அகப்படுத்து-என்னைத்
தப்பாதபடி புன்முறுவல், கடைக்கண் நோக்கம் முதலியவைகளிலே அகப்படுத்தி. நல் நெஞ்சம் கூவிக்
கொண்டு - 1தான் என்றால், “நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி” என்று நான்
பிற்பாடையாம்படி என்னிற்காட்டிலும் முற்படும்படியான நெஞ்சைத் தன் பக்கலிலே நொடித்துக் கொண்டு.
அலை கடல் பள்ளி அம்மானை-2“ஸ்ரீமத் துவாரகையில் இருக்கில், ‘பெண்களுக்கு ஓலக்கங்
கொடுத்த இடம்’ என்று சம்பந்தம் சொல்லிக்கொண்டு வரக்கூடும்” என்று எட்ட ஒண்ணாத நிலத்திலே
பின்னையும் போய்ப் புக்கான். பெண் பிறந்தார்க்கு நினைக்க ஒண்ணாதபடி கொந்தளிக்கிற கடல்
என்பாள் ‘அலை கடல்’ என்கிறாள். 3பெரிய செல்வம் கைப்பட்டவாறே கடல்
ஓடத் தொடங்கினான். ஆழிப்பிரான்தன்னை - ‘புக ஒண்ணாத நிலத்திலே புக்கான்’ என்று விட ஒண்ணாதபடியாயிற்றுக்
கையும் திருவாழியுமான அழகு. 4கடல் ஓடியாகிலும் பெறவேண்டியாயிற்று இருப்பது.
கலை கொள் அகல்
அல்குல் தோழி-நல்ல புடைவையையுடைத்தான அகன்ற நிதம்பப் பிரதேசத்தையுடைய தோழீ! என்றது,
5உன் வடிவு போலே அநுகூலமாய் இருக்க வேண்டாவோ உன் வார்த்தையும் என்றபடி. அன்றிக்கே,
அவள் மடியிலே கிடந்து சொல்லுகிறாள் ஆகவுமாம். மேல், “தோழிமீர், என்னை இனி உமக்கு
ஆசை இல்லை” என்றாள்; இங்கே, ‘தோழி நம் கண்களாற் கண்டு’ என்று விளிக்
_____________________________________________________
1. நெஞ்சுக்கு நன்மையாவது
யாது? என்ன, ‘தான் என்றால்’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘தான் என்றால்’
என்னுமிதனை, பின்
வருகின்ற ‘முற்படும்படியான’ என்றதனோடு கூட்டுக. “நெஞ்சே” என்ற
பாசுரம், பெரிய
திருவந். 1. நொடித்துக் கொண்டு-இங்கிதமாக
அழைத்துக்கொண்டு.
2. மேல் “துவராபதி மன்னன்”
என்றதற்கும், இங்கு “அலைகடற் பள்ளி
அம்மான்” என்றதற்கும் கருத்து அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீமத்
துவாரகையில்’
என்று தொடங்கி.
3. “நன்னெஞ்சம் கூவிக்கொண்டு”
என்றதனையும் கூட்டி வேறும் ஒரு கருத்து
அருளிச்செய்கிறார் ‘பெரிய செல்வம்’ என்று தொடங்கி.
கடல் ஓடத்
தொடங்கினான்-கப்பல் வியாபாரத்துக்குத் தொடங்கினான் என்பது தொனி.
4. கடல் ஓடியாகிலும்-கடலிலே
விழுந்தாகிலும்; சாகசம் பண்ணியாகிலும்.
5.
“கலை கொள் அகல் அல்குல்” என்று விசேடித்ததற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘உன் வடிவு
போலே’ என்று தொடங்கி.
|