பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
143

அச

அசாதாரண பந்தமுடையார் தங்கள் ஆதரத்தாலே செய்யக் கடவது ஒன்று அன்றோ இது’ என்னக் கடவன், ‘அது அன்று இது, நான் சாதந அநுஷ்டானம் செய்கிறேன்’ என்னக் கடவேன். 1“எக்காலத்திலும் கைகூப்பிக் கொண்டு நிற்பார்கள், அதுவே மிகவும் விருப்பம் என்பது தோன்றும்படியாகச் சந்தோஷத்துடன் இருப்பார்கள்” என்கிற இதிலே செலவு எழுதப் பார்ப்பர் அவர்; ‘அங்ஙனம் அன்று, உன் உடம்பு பெறுகைக்காகச் செய்கிறேன்’ என்னக் கடவேன்.

    2
குதிரியாய்-குத்ஸிதா ஸ்த்ரீ; குஸ்திரீ என்கிற பதத்தைக் குதிரி என்கிறதாய், அதாகிறது, அடங்காத பெண்ணாய், தடை இல்லாத பெண் என்கிறபடியாய், தடையுடையேன் அன்றிக்கே என்னுதல்; அன்றிக்கே, குதிரி என்பது, செப்பு என்ற பொருளதாய், பெண்களுக்குச் செல்வமாவன: நாணும் நிறையுமே யன்றோ, அவற்றை இட்டு வைக்கும் கலமே அன்றோ சரீரம், அவை போகையாலே வெறும் சரீரமாத்திரமேயாய் என்னுதல்; அன்றிக்கே, பனை மடலைக் குதிரையாகச் செய்து கையிலே கொள்ளக்கடவர்கள் மடல் ஊருகின்றவர்கள், அதனையுடையேனாய் என்னுதல். மடல் ஊர்துமே- 3‘செய்யக்கடவதாயிற்ற

__________________________________________________

  என்பது முடிய. ‘நான் இதனைச் செய்தால்’ என்றது, நான் காலிலே குனிந்தால்
  என்றபடி. மனிச்சு-ஆண் தன்மை, பௌருஷம். அசாதாரண
  பந்தமுடையார்-சொரூப ஞானமுடையவர்கள். அசாதாரணம்-பொது
  அல்லாதது. தங்கள் ஆதரத்தாலே-சொரூபத்திற்குத் தக்கது என்னும்
  ஆசையால்.

1. இரண்டாவது வகையை அருளிச்செய்கிறார் ‘எக்காலத்திலும்’ என்று தொடங்கி.

  “முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத் ச்வேத்வீப நிவாசிநாம்
   நித்யாஞ்சலிபுடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந:”

  என்பது, பாரதம் மோக்ஷதர்மம். ‘என்கிற இதிலே’ என்றது, பேற்றின்
  தன்மையிலே என்றபடி.

2. “குதிரி” என்றதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
  அடங்காத பெண் என்பது முதற்பொருள். இப்பொருளுக்கு, குத்ஸித ஸ்திரீ
  என்பது, “குதிரி” என வந்ததாகக் கோடல் வேண்டும். இரண்டாவது பொருள்,
  ஆபரணம் இட்டு வைக்கும் செப்பு என்பது. குதிரையையுடையவள் என்பது,
  மூன்றாவது பொருள்.

3. “ஊர்துமே” என்ற ஏகாரத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘செய்யக்
  கடவதாயிற்ற பின்பு’ என்று தொடங்கி. ஒன்றை நினைத்து-மடலை நினைத்து.
  ‘ஒன்றைச் சொல்லுகிறது’ என்றது, “உலகு தோறு அலர் தூற்றி” என்று
  சொல்லுகிறது என்றபடி.