பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
157

களுக

களுக்குப் புலப்படுவது ஒன்றும் இல்லாதபடி ஆயிற்று என்றபடி.

    நீர் எல்லாம் தேறி-தண்ணீரில் வசிக்கும் பிராணிகள் முழுதும் ஆழ இழிந்து, அங்குள்ள ஒலியும் அடங்கிற்று. ‘ஊர் எல்லாம் துஞ்சி’ என்கையாலே, சிலர் வார்த்தை கேட்டுப் போது போக்குமது இல்லை என்கை. ‘உலகெல்லாம் நள்ளிருளாய்’ என்கையாலே, கண்களுக்குப் புலப்படும் பொருள் ஒன்று இல்லாமையாலே ஒன்றைக் கண்டு போது போக்குமது இல்லை என்கை. ‘நீர் எல்லாம் தேறி’ என்கையாலே, முதலிலே காதுக்கு விஷயம் இல்லை என்கை. இவைதாம் மற்றைய இந்திரியங்களின் காரியங்கட்கும் உபலக்ஷணமாய் இருக்கின்றன. 1பகலிலே ஆனால் இந்திரியங்கள் தனது தனது விஷயங்களிலே பல்லி பற்றுகையாலே ஆற்றாமை அரையாறு பட்டு இருக்கும், இராத்திரியில் எல்லா இந்திரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்கு ஆகையாலே, ஆற்றாமை கரை புரண்டு இருக்கும். ஓர் நீள் இரவாய் நீண்டதால்-2பண்டும் இராத்திரி நெடுகாநிற்கச் செய்தே பகலும் இரவுமாக வருமே அன்றோ, இப்பொழுது பகல் விரவாத இரவு ஆயிற்று. மனிதர்களுடைய இரவினைக் காட்டிலும் தேவர்களுடைய இரவு நீண்டிருக்குமானால் அதற்கு எல்லை உண்டு, அங்ஙனமும் ஓர் எல்லை இல்லையாயிருந்தது என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள். பார் எல்லாம் உண்ட-பிரளய ஆபத்திலே இன்னார் இனியார் என்னாதே எல்லாரையும் ஒருசேரக் காப்பாற்றியவன். 3பிரளய ஆபத்தில் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும்

அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும்

____________________________________________________

1. பிரிவுத் துன்பம் இரவில் மிகுவதற்குக் காரணம் யாது? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘பகலிலே’ என்று தொடங்கி. ‘பல்லி பற்றுகை’
  என்றது, பல்லி பற்றினாற் போலே, தனது தனது விஷயங்களை விடாமல்
  பற்றுதல் என்றபடி.

2. ‘பண்டும் இராத்திரி நெடுகா நிற்க’ என்றது, “சேட்பட்ட யாமங்கள்”
  (2. 1 : 2) என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘பகலும் இரவுமாக’ என்றது,
  “சுடர்கொள் இராப்பகல்” (2. 1 : 4) என்றதனைத் திருவுள்ளம்பற்றி.


3. எல்லார்க்கும் வந்த ஆபத்தைக் காப்பாற்றினோம், உமக்கு ஒருவர்க்காகச்
  செய்யப் போமோ? என்ன, இதற்கு விடை இறுக்கும் மூலமாக
  வியாக்யாதாவின் ஈடுபாடு, ‘பிரளயாபத்தில்’ என்று தொடங்கும் வாக்கியம்.