பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
16

சர

சர்வாந்தர்யாமியான நீயும் ‘மெய்’ என்று கருதும்படி உன்னையும் பகட்டும் வஞ்சனை பொருந்திய மனத்தை. தவிர்ந்தே-மனத்தொடு படாமல் இழிந்தாரையும் மேல் விழும்படி கொண்டு முழுகும் விஷயமே அன்றோ?

    உன்னை - நட்புத்தன்மை காரணமாக 1“விடமாட்டேன்” என்னும் உன்னை. அன்றிக்கே, சம்பந்தமுள்ளவனுமாய் இனியனுமான உன்னை என்னுதல். கண்டுகொண்டு 2‘ஒருபடி காண வல்லோமே!’ என்ற நான், நிதி எடுத்தாற் போலே அடைந்து. உய்ந்தொழிந்தேன்-3“இல்லாதவனாக ஆகிறான்” என்னும்படி இருக்கிற நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன். 4“தேவர்கள், அமுதத்தைப் பார்த்துத் திருப்தி அடைகிறார்கள்” என்றே அன்றோ சொல்லப்பட்டிருக்கிறது? நன்று; இனி, நீர் செய்யப் பார்த்தது யாது? என்ன, வெள்ளத்து அணைக் கிடந்தாய்-பரமபதத்தை விட்டுத் திருப்பாற்கடலிலே இவ்5வேலையிலே என்னைக் காப்பாற்றும் பொருட்டுக் காலத்தை எதிர் நோக்கினவனாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிறவனே! இனி-உனக்கு ஒத்ததான பரமபதத்தை விட்டு ஒவ்வாததான சம்சாரத்திலே

_______________________________________________

1. “மித்ரபாவேந சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந”

  என்பது, ஸ்ரீராமாயணம். யுத். 11 : 3.

      “எம்பெருமான்”, “மணிவண்ணன்” என்பனவற்றையும் கூட்டி “உன்னை”
  என்பதற்கு வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் சம்பந்தமுள்ளவனுமாய்’
  என்று தொடங்கி.

2. உள்ளன மற்றுளவா” என்றது மேலே இருக்க, ‘ஒருபடி காணவல்லோமே”
  என்னும் இது பொருந்தும்படி எங்ஙனே? என்ன, “கள்ள மனந்தவிர்ந்து”
  என்றதனால், விஷய வைலக்ஷண்யம் ஈடுபடுத்தின பின்பு அப்படி இருக்கக்
  குறை இல்லை என்று அருளிச்செய்வர். ஒருபடி: சிலேடை.

3. “அஸந்நேவ ஸ பவதி அசத் பிரஹ்மேதி வேத சேத்”

   என்பது, தைத்திரீய ஆனந்த உப.

4. கண்ட மாத்திரத்தில் உஜ்ஜீவனமாய் இருக்குமோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘தேவர்கள்’ என்று தொடங்கி.

  “ந வை தேவா அஸ்நந்தி ந பிபந்தி ஏதத் ஏவ அமிருதம்
   திருஷ்ட்வா திருப்யந்தி”

  என்பது, சந்தோக். 3 : 10.

5. வேலை. சிலேடை: காலமும், அலையும்.