பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
160

New Page 1

    பொ-ரை :- ஆழ்ந்த கடலையும் பூமியையும் ஆகாயத்தையும் மூடிக்கொண்டு பெரிய விகாரத்தையுடையதாய் ஒப்பற்ற வலிய இருள் மயமான இரவாயே நீண்டுவிட்டது; நீலோற்பல மலர்போன்ற நிறத்தை யுடையவனாகிய என் கண்ணபிரானும் வருகின்றான் இலன்; பாவியேனாகிய என்னுடைய நெஞ்சமே! நீயும் அநுகூலமாய் இருக்கின்றாய் இல்லை; ஆதலால், இனி என் உயிரைக் காப்பவர் யார்? என்கிறாள்.

   
வி-கு :- காலம் மூடி விகாரமாகி இரவாய் நீண்டது என்க. வண்ணனாகிய கண்ணன் என்க.

    ஈடு :-
இரண்டாம் பாட்டு. 1இந்நிலையில் ஸ்ரீ கிருஷ்ணனும் வருகின்றிலன்; நெஞ்சமே! என்னுடைய சம்பந்தத்தாலே, நீயும் அவனைப் போன்று பாங்கு அன்றிக்கே ஒழிந்தாய் என்கிறாள்.

    கண்ணனும் வாரான், நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை ஆவி காப்பார் இனி யார் - உதவுமவன் உதவிற்றிலன், நெஞ்சும் பாங்கு அன்றிக்கே ஒழிந்தது, இனி, காப்பவர் யார்? ஆழ்கடல் மண் விண் மூடி - அளவிட முடியாததான கடல், எல்லாப் பொருள்களுக்கும் இடம் கொடுக்கக் கூடியதான பூமி, அந்தப் பூமிக்கும் இடம் கொடுக்கக்கூடியதான ஆகாசம் இவற்றை முழுதும் மறைத்து. 2காரணப் பொருள்களைக் காரியப் பொருள்களிலே ஒன்று மறைத்தது. மா விகாரமாய் - பின்னரும் அவ்வளவில் முடிவு பெறுவதாய் இருக்கிறது இல்லை, மஹா விகாரத்தையுடைத்தாய்ப் பரமபதத்தையும் கணிசிக்கிறாப் போலே இரா நின்றது. 3விஸ்வரூபத்தைக் காட்டின சர்வசக்தி செய்வன எல்லாம் செய்யா நின்றது என்றபடி. ஓர் வல் இரவாய்-4திருவாழியை இட்டுத் துண்டித்து உதவவரிலும் வர ஒண்

_____________________________________________________

1. “ஆழ்கடல் மண் விண் மூடி . . . நீண்டதால்” என்றதனைக் கடாக்ஷித்து
  ‘இந்நிலையில்’ என்கிறார். ‘நெஞ்சமே! நீயும் . . . பாங்கு அன்றிக்கே
  ஒழிந்தாய்’ என்றது, அவனை நினைத்துத் தரித்துக்கொண்டிருக்கைக்கு, நீ
  என்னதுவாய் இருக்கிறாய் இல்லை; “என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்”
  என்கிறபடியே, நீயும் அங்கே ஒழிந்தாய் என்றபடி.

2. காரணப்பொருள் - ஐம்பெரும்பூதங்கள். காரியப் பொருள்களிலே ஒன்று -
  இருள்.

3. “காரணப்பொருள்களைக் காரியப்பொருள்களிலே ஒன்று மறைத்ததற்கு ஒரு
  திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘விஸ்வரூபத்தை’ என்று தொடங்கி. சர்வசக்தி -
  ஸ்ரீ கிருஷ்ணன்.

4. “வல்” என்பதன் பொருளை விளக்குகிறார். ‘திருவாழியை’ என்று தொடங்கி.