|
வ
விடியும் இவளுக்கு; பகற்கண்டேன்
நாரணனைக் கண்டேன் என்பதன்றோ பெரியார் திருவாக்கு. 1பாவியேன் நெஞ்சமே-உனக்கும்
அவனோடு ஒத்த சம்பந்தமே அன்றோ. அவன் உதவும் தன்மையன் அல்லாதவனாயன்றே உதவாது விட்டது,
என்னுடைய சம்பந்தமே அன்றோ. 2என் மார்விலே அணைக்கை அன்றோ அவன் உதவாது ஒழிகிறது,
அது உனக்கும் ஒக்குமே அன்றோ. நீயும் பாங்கு அல்லையே-3ஒரு தன்மையாலே ஒற்றுமை உண்டானால்
வேறு ஒரு தன்மையாலே வேறுபாடு உண்டானால் ஆகாதோ? 4ஸ்வந்திரனாய்ப் பரதந்திரனான
அவனைப் போன்று ஆக வேணுமோ பாரதந்திரியமே ஸ்வரூபமான நீயும். 5அவனுக்குக் காதலனாம்
தன்மை தவிர்ந்தது என்றால் ஸ்வாதந்திரியமே ஜீவிக்கும்; உனக்கு அங்ஙன் ஒன்று இல்லையே.
இருவர் பவ்யராக இருந்தால், அவர்களிலே ஒருவன் பவ்யன் அன்றிக்கே ஒழியில் மற்றையவனும் பவ்யனாகாது
ஒழிய வேணுமோ. 6‘என் கண்ணனும் வாரானால்’, ‘என் நெஞ்சமே’ என்று ஒருசேரச்
சொல்லலாய் இருக்கிறதே அன்றோ.
(2)
_____________________________________________________
1. “என் கண்ணன்”,
“பாவியேன் நெஞ்சம்” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘உனக்கும்’ என்று தொடங்கி.
2. சம்பந்தம் யாது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘என் மார்விலே’
என்று தொடங்கி.
3. “நீயும்” என்ற உம்மையை,
சமுச்சய உம்மையாகக் கொண்டு மேலே
அருளிச்செய்த கருத்தே அன்றி, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘ஒரு தன்மையாலே’ என்று தொடங்கி. என்றது, மார்பிலே அணைந்த
ஆகாரத்தாலே ஒத்திருந்தாலும்,
என்னைப் பிரியாதிருக்கிற தன்மையாலே
வேறுபட்டதாயிருத்தல் ஆகாதோ? என்றபடி.
4. “நீயும்” என்ற உம்மைக்கு
வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘ஸ்வதந்திரனாய்’ என்று தொடங்கி.
5. பரதந்திரனான யான்,
ஸ்வந்திரனாய்ப் பரதந்திரனானவனைப் போலே
இருந்தால் வரும் கேடு யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘அவனுக்கு’ என்று தொடங்கி.
6.
‘இருவரும் பவ்யர்’ என்றதோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘என் கண்ணனும்’ என்று தொடங்கி.
பவ்யர்-பணிவுள்ளவர்
|